காஞ்சிபுரத்தில் கேக் சாப்பிட்ட மூன்று குழந்தைகளுக்கு, வாந்தி மயக்கம்
காஞ்சிபுரத்தில் கேக் சாப்பிட்ட மூன்று குழந்தைகளுக்கு, வாந்தி மயக்கம் ஏற்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.காஞ்சிபுரம், செவிலிமேடு பகுதியை சேர்ந்த சுரேந்திரன் என்பவர், நேற்று மதியம், அப்பகுதியில் உள்ள பேக்கரியில் கேக் வாங்கிச் சென்றுள்ளார். அதை, மகள் சிறில், 3, கொடுத்துள்ளார். அவர் வீட்டு அருகிலுள்ள நண்பர் விமல்ராஜ் என்பவர் குழந்தைகள் இருவருக்கும், கேக் கொடுத்துள்ளார்.
பின், சிறிது நேரம் கழித்து குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர்கள், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
கருத்துகள் இல்லை