Header Ads

  • சற்று முன்

    திருவாடானை தாலுகா தொண்டியில் இலங்கைக்கு கடற்கரை மார்க்கமாக கடத்த இருந்த 93 மூட்டைகள் 2 டன் மஞ்சள் பறிமுதல்.

    திருவாடானை தாலுகா தொண்டி அருகே காரங்காடு கிராமத்தில் இருந்து இலங்கைக்கு கடற்கரை மார்க்கமாக கடத்த இருந்த 93 மூட்டைகள் 2 டன் மஞ்சள் பறிமுதல். கடத்த இருந்தவர்கள் தப்பி ஓட்டம்,

    காடுங்காடு கிராமத்தில் இருந்து இலங்கைக்கு கடல் மார்க்கமாக மஞ்சலை கடத்த இருந்த தகவல் ராமநாதபுரம் கியூ ப்ராஞ்ச்க்கு கிடைத்தது. உடன் நேற்று மாலை முதல் காரங்காடு பகுதியை ரகசியமாக காவல்துறையினர் கைது செய்து வந்த நிலையில் காரங்காடு கடற்கரை அருகே உப்பு நீரை குடிநீராக்கும் திட்டத்தின் படி செயல்படுத்த உள்ள அறையில் 93 மஞ்சள் மூட்டைகள் பதுங்கி இருந்தது தெரியவந்தது அதனை தொடர்ந்து கண்காணித்து வந்த காவல்துறையினர் இன்று அதிகாலை 4 மணியளவில் மஞ்சள் முட்டைகளை கடற்கரை மார்க்கமாக கடத்த இருந்த போது காவல்துறையினர் சுற்றி வளைத்தனர் கடத்த இருந்தவர்கள் தப்பி ஓடி விட்டனர். க்யூ பிராஞ்ச் போலிசார் 93 மூடைகள் மஞ்சலை கைப்பற்றினார்கள். ஒரு மூட்டையில் 25 கிலோ வீதம் 2325 கிலோ 2 டன்னிற்கு மேல் மஞ்சலை கைப்பற்றி இதை யார் இலங்கைக்கு கடல் மார்க்கமாக கடத்த இருந்தார்கள் அவர்களுக்கு எங்கிருந்து மஞ்சள் கிடைத்தது. இந்த மஞ்சள் மூடைகளை  இங்கு கொண்டு வந்தவர்கள் யார் யார் உள்ளுரில் யாரேனும் உடந்தையாக உள்ளார்கள என விசாரித்து வருகிறார்கள்..

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad