ராகு,கேது, பெயர்ச்சி 2020 - - கடகம் - சிம்மம் - கன்னி
கடகம்
உங்க ராசிக்கு சாதகமான இடத்திற்கு ராகு கேது வந்திருக்கிறார்கள். 11ல் வரும் ராகு எதிர்பாராத யோகத்தையும் திடீர் பண வரவு வரும். உங்களுக்கு இருந்த பிரச்சனைகள் இனி தானாகவே மறைந்து விடும். மோட்ச காரகன் கேது பூர்வ பூண்ணிய ஸ்தமான 5ல் வருவது யோகம் தான். புத்திர பாக்கியம் தெய்வ அருள் புண்ணியம் காதல் ஆகியவற்றை குறிப்பிடும் ஸ்தானத்தில் கேது வருவதால் சோதனைகளை தாண்டி மாற்றங்களை கொடுக்கும். வாங்கிய கடனுக்கு அசலுக்கு அதிகமாக கடனை செலுத்தியவர்களுக்கு கடன் சுமை குறையும். கடன் பிரச்சினைகள் ஏமாற்றங்களால் ஊரை விட்டு ஓடி வீடுவோமா என்று நினைத்தவர்கள் சொந்த ஊரிலே தலை நிமிர்ந்து வாழலாம். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை உருவாகும். தடைப்பட்ட திருமணங்கள், புத்திரபாக்கியம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும்.செய்யும் தொழிலில் பார்க்கும் வேலையில் திருப்திகரமான போக்கும் மாற்றமும் உருவாகும்.இது வரை உங்களை தரக்குறைவாக நடத்தியவர்கள் எல்லாம் இனி உங்களை கண்டு மதிப்பு மரியாதை கொடுப்பார்கள். 5ல் கேது இருப்பதால் குலதெய்வ பிரார்த்தனை செய்யுங்கள்.
சிம்மம்
சிம்மம் ராசிக்காரர்களே பத்தாம் வீட்டில் ராகுவும் நான்காம் வீட்டில் கேதுவும் சஞ்சரிக்கப் போகின்றன. கேந்திரத்தில் பாவ கிரகங்கள் வரும் பொழுது வலிமையான பலனை கொடுக்கும் சூரியனை கண்டு பனி விலகுவதை போல ஓவ்வொரு முயற்சியும் காரியமும் வெற்றியை கொடுக்கும். 10 ஆம் இடம் தொழில் ஸ்தானம், கீர்த்தி, செல்வாக்கு அந்தஸ்து ஸ்தானத்தில் ராகு வருவதால் தொழிலாளி முதலாளி ஆகலாம். நினைத்த மாதிரி வேலை வாய்ப்பு அமையலாம் நல்ல சம்பளம் வசதி வாய்ப்புகளை உருவாக்கி தரலாம். கடந்த காலங்களில் வேலையை இழந்து வருமானம் இல்லாமல் கணவன் மனைவி உறவு கசந்து சங்கடங்களை சந்தித்த உங்களுக்கு ராகு கேது பெயர்ச்சி யோகத்தைக் கொடுக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கணவன் மனைவி ஓற்றுமை ஒங்கும்.குடும்பத்தில் சுபகாரியம் சுபமாக முடியும். கடன் பட்டு கலங்கி போனவர்களுக்கு இனி சிறிது சிறிதாக கடன் சுமை குறையும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே ராகு 9ஆம் வீட்டிற்கும் கேது மூன்றாம் வீட்டிற்கும் வருவது யோகமான அமைப்புதான். தசைகள் யோகமாக இருந்தால் தலைக்கு வந்தது தலை பாகையோடு போய்விட்டது என்று ஆறுதல் படுத்திக் கொள்ளலாம். குடும்பத்தில் சுபகாரியம் புதுமுயற்சி, திருமணம்,புத்திர பாக்கியம் போன்ற சுபமங்கள நிகழ்ச்சிகள் நடக்கும். சில மாதங்களில் ராகு மீது குரு பார்வை கிடைக்கும். உங்க ராசிக்கும் குரு பார்வை கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த உதவிகள் வேலை வாய்ப்புகள், தேடி வரும். வருமானம் திருப்தி தரும். குடும்பத்தில் பிரிவு மனக்கசப்புகளை சந்தித்தவர்களுக்கு ராகு கேது விடிவையும் விமோசனத்தையும் கொடுப்பார்.
கருத்துகள் இல்லை