• சற்று முன்

    ஸ்ரீ பெரும்புதூர் 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    ஸ்ரீ பெரும்புதூர் அருகே கீவளுர், தண்டலம், மேவலூர், குப்பம் ஆகிய பகுதிகளில் ஏராளமான பன்னாட்டு தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு வடமாநிலங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள், தங்கி வேலை செய்கின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் ஸ்ரீபெரும்புதூர் போலீசார், மேற்கண்ட பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, சந்தேகப்படும்படி 4 பேர் சுற்றி திரிந்தனர். அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தபோது, திருவள்ளுர் மாவட்டம் குத்தம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த நாகராஜ் (27), ராஜேஷ் (24), லோகேஷ் (26), விக்னேஷ் (23) என தெரிந்தது. மேலும், அந்த பகுதியில் வடமாநில தொழிலாளர்களுக்கு கஞ்சா சப்ளை செய்தது தெரிந்தது. இதையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad