Header Ads

  • சற்று முன்

    ராமநாதபுரம் மாவட்டம் நீண்ட நேரம் காக்க வைத்த, பட்டினி போட்ட மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல வாரிய அலுவலகம்


    மாற்றுத் திறனாளிகளுக்கான தனிப்பட்ட தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாமில் மாற்றுத்திறனாளிகளை நீண்ட நேரம் காக்க வைத்த, பட்டினி போட்ட மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல வாரிய அலுவலகம்

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பு  மாற்றுத் திறனாளிகளுக்கான தனிப்பட்ட தேசிய அடையாள அட்டை  வழங்கும் முகாம் மற்றும் நிவாரணம்,  உபகரணங்கள் வழங்குவதா கூறி பந்தல போடப்பட்டு இருக்கைகளும் போட்டிருந்தனர். இதில் திருவாடானை தாலுகாவில் உள்ள மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்ட நிலையில் அனைவருக்கும் மாற்றுதிறனாளிகளுக்கான தனித்த தேசிய அடையாள அட்டை வழங்கப்படும் என்றும், மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனோ வைரஸ் தொற்று நிவாரணநிதி ரூபாய் 1000 வழங்கப்படும் என்றும், புதிதாக உபகரணங்கள் மாற்று திறனாளிகளுக்கு  மாவட்ட ஆட்சியம் வீரராகவராவ் வழங்குவார் என்று கூறியிருந்தார்கள். ஆனால் வீரராகவராவ்  வேலை பசுவின் காரணமாக வர இயலவில்லை. அதனால் இப்பகுதி மாற்று திறனாளிகள் மற்றும் புதிதாக மாற்று திறனாளிகளுக்கான புதிய  அட்டை  பெற காலை 10. மணி முதல் முகாமில் கூடினர்.  நம்புதாளையில் இருந்து கண் தெரியாத மூதாட்டி தனக்கு புதிய அட்டைக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் ஏழை மூதாட்டிக்கு ஆய்வு செய்ய மருத்துவர்கள் வரவில்லை. பின்னர் விசாரித்த போது முகாமிற்கு எழும்பு மருத்துவர், நரம்பியல் மருத்துவர், மனநல மருத்துவர் இப்படி ஊனமுற்றவர்களுக்கு ஆய்வு செய்ய எந்த மருத்துவரும் வரவில்லை. ஒரு மருத்துவர் வந்திருந்தார் அவரோ நான் இதெற்கெல்லாம் சான்றிதம் வழங்க முடியாது என்று கூறிவிட்டார். மேலும் முகாமில் தற்போதுள்ள கரோன வைரஸ் தொற்று பரவல் குறித்து கிஞ்சித்தும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் அதிகாரிகள் அமர்ந்திருந்தனர். மாற்றுதிறனாளிடமும் இது பற்றி எவ்வித விழிப்புணர்வும் இல்லை, முக கவசங்கள் அணியாமல் சமுக இடைவெளியில்லாமல் இருந்தனர் இதற்கு முத்தாய்ப்பாக மாவட்ட மாற்று திறனாளி  நல வாரிய அலுவலர் அதைப் பற்றி  சிறிதும் கவலையின்றி அமர்ந்திருந்தார். அவரை சுற்றி கூட்டமாக சமூக இடை வெளியில்லாமல் நின்றனர்.மாற்றுத் திறனாளிகளுக்கு கரோனோ கால நிவாரண தொகையும் 2 மணிக்கு மேல் வழங்க ஆரம்பித்தன. முகாமில் கலந்து கொண்ட மாற்று திறனாளிகளுக்கும் அவர்களுடன் துணையாக வந்தவர்களுக்கும் உணவு, குடிதண்ணீர் கூட முகாமில் வைக்க வில்லை. மாவட்ட மாற்று திறனாளி  நல வாரிய அலுவலரிடம் பெயர் கேட்ட போது பெயரை கூற மறுத்துவிட்டார். அரசு மக்கள் தேடி அரசு உதவிகள் வழங்கிட உத்தரவிட்டாலும் அதிகாரிகள் அதை முழுமையாக செய்வதில்லை. முகாம் ஏற்பாடுகள் பற்றி திருவாடானையில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் யாருக்கும் தெரிவிக்கபபடவில்லை. இவர்களின் நடவடிக்கை உண்மையான மாற்று திறனாளிக்கு நிவாரணம் சென்றடைந்ததா? என்பது கேள்வி குறி.

     திருவாடானை எல் .வி. ஆனந்தன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad