Header Ads

  • சற்று முன்

    கமலா ஹாரிஸ்: அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளிப் பெண்

    கமலா ஹாரிஸ்: அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளிப் பெண் அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளரான ஜோ பிடன் செனட்டர் கமலா ஹாரிஸை துணை அதிபர் வேட்பாளராக அறிவித்துள்ளார்.

    துணை அதிபர் பதவிக்கு அறிவிக்கப்பட்டுள்ள முதல் கருப்பின பெண் மற்றும் முதல் ஆசிய அமெரிக்க பெண் கமலா ஹாரிஸ். அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மூன்றாம் தேதி நடைபெறவுள்ளது. குடியரசுக் கட்சியின் சார்பாக அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். முன்னதாக ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கான போட்டியில் கடுமையாக ஈடுபட்டு தோற்றவர் கமலா.


    கமலா ஹாரிஸுக்கும் குடியரசுக் கட்சி துணை அதிபர் வேட்பாளர் மைக் பென்ஸுக்கும் அக்டோபர் 7ஆம் தேதி விவாதம் நடைபெறவுள்ளது. இதற்கு முன்பு இரண்டு முறை மட்டுமே பெண்கள் துணை அதிபர் பதவிக்கு போட்டியிட்டுள்ளனர்; 2008ஆம் ஆண்டு குடியரசுக் கட்சியின் சார்பாக சாரா பாலினும், 1984ஆம் ஆண்டு ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஜெரால்டின் ஃபெரொரோவும் போட்டியிட்டுள்ளனர். ஆனால் இவர்கள் வெற்றி பெறவில்லை. அமெரிக்காவின் இரு முக்கிய கட்சிகளான குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி இரண்டுமே அதிபர் வேட்பாளராக கருப்பின பெண்ணை நிறுத்தியதில்லை. இதுவரை யாரும் அதிபராக இருந்ததும் இல்லை.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad