‘மனித மூளையில் கம்யூட்டர் சிப் பொருத்தும் ஆய்வு - பன்றி மூளையில் பொருத்தி பார்த்த சோதனை வெற்றி.
மூளையில் கணினி சிப் வைத்து 2 மாதங்களாக ஆய்வு செய்யப்பட்ட பன்றியை அறிமுகப்படுத்தியுள்ளது, எலோன் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனம். மனிதனின் மூளையில் சிப் வைக்கும் புரட்சிகரமான செயல்பாட்டுக்கு முன்னோட்டமாகவே இந்த செயல்முறை பார்க்கப்படுகிறது.
தொழிலதிபர் எலோன் மஸ்க்கால், 2016 - ம் ஆண்டு சான் பிரான்சிஸ்கோவை மையமாகக்கொண்டு தொடங்கப்பட்ட நிறுவனம் நியூராலிங்க் . மனிதனின் மூளையை நேரடியாக இயந்திரங்களோடு இணைக்கும் தொழில்நுட்பத்தை ஆராய்ந்து, மேம்படுத்துவதற்கென்றே உருவாக்கப்பட்ட நிறுவனம் இது. இந்த ஆய்வுக்காக 11,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆராய்ச்சி மட்டும் வெற்றிபெற்றுவிட்டால் மனிதனின் மூளையில் பொருத்தப்படும் கணினி சிப்கள் மூலம், இயந்திரங்களை நேரடியாகக் கட்டுப்படுத்த முடியும். இத்துடன் இல்லாமல், உடலில் ஏற்படும் நரம்பியல் தொடர்பான நோய்கள், முதுகுத்தண்டுவட பிரச்னைகளைக் குணப்படுத்திவிட முடியும் என்று நம்பப்படுகிறது.
இந்த ஆய்வின் முன்னோட்டமாக, பன்றி ஒன்றின் மூளையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு எட்டு மி.மீ அளவுள்ள கம்யூட்டர் சிப் ஒன்றைப் பொருத்தி நியூராலிங் ஆய்வு செய்தது. கம்யூட்டர் சிப் பொருத்தப்பட்ட பன்றி இரண்டு மாதங்களாக எந்தவித உடல் உபாதைகளும் இல்லாமல் நலமாக இருக்கிறது. மேலும், பன்றியின் அன்றாட நடவடிக்கையின் போது உருவாகும் சிக்னல்கள் கம்யூட்டர் மூலம் பெற்று ஆய்வு செய்தது
கருத்துகள் இல்லை