மது குடிக்க மனைவி பணம் தராததால் கணவர் தற்கொலை
மது குடிக்க மனைவி பணம் தராததால், வேன் டிரைவர் தற்கொலை செய்து கொண்டார். கோபி அருகே மொடச்சூரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 56, வேன் டிரைவர்; மதுபோதைக்கு அடிமையாகி, மனைவி அலுமேலுவிடம், 49, பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்தார். நேற்று முன்தினம் மதியம், வழக்கம்போல் பணம் கேட்டு தொந்தரவு செய்தார். அவர் பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த ரவிச்சந்திரன், கட்டுக்கம்பியால் தனக்குத்தானே கழுத்தை இறுக்கி கொண்டார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார். அவரின் மகள் கோகிலா, 24, புகாரின்படி, கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை