படப்பை அருகே டீ விற்பனையாளர் தற்கொலை
படப்பை:காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையை அடுத்த நாவலூர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 57). சைக்கிளில் டீ விற்பனை செய்து வருபவர். இவர் குடும்பத்தகராறு காரணமாக நேற்று முன்தினம் இரவு திடீரென தன்னுடைய உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
கருத்துகள் இல்லை