• சற்று முன்

    சிகரெட் வாங்கி தர மறுத்த வாலிபர் அடித்துக்கொலை 2 பேர் கைது


    மும்பை காட்கோபர் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் யோகேஷ் (வயது24). சம்பவத்தன்று இவரிடம் அதே பகுதியை சேர்ந்த ஆகாஷ், சர்தார் அவினாஷ் உள்பட 3 பேர் சிகரெட் வாங்கி தரும்படி கேட்டனர். இதற்கு யோகேஷ் மறுப்பு தெரிவித்து உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் யோகேசை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில், அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த பந்த் நகர் போலீசார் யோகேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, அவரை அடித்துக்கொன்ற ஆகாஷ், சர்தார் அவினாஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய மற்றொருவரை பிடிக்க விசாரணை நடத்தி வருகி்ன்றனர்.


    எமது செய்தியாளர் : செந் 



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad