• சற்று முன்

    செப்டம்பர் 1 முதல் தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் பேருந்துகளை இயக்கலாம் என மருத்துவ குழு தமிழக அரசிடம் பரிந்துரை


    தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரே நாளின் பாதிப்பு 6 ஆயிரத்தை கடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே தமிழகத்தில் பொது முடக்கத்தை நீட்டிப்பதா, இல்லையா, மேலும் தளர்வுகள் அளிப்பது குறித்து தலைமை செயலகத்தில் மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். 

    முன்னதாக மாவட்ட ஆட்சியர்களுடனும் முதல்வர் ஆலோசனை நடத்தினார். வரும் 31 ஆம் தேதியுடன் பொதுமுடக்கம் முடிவடையுள்ள நிலையில் அதை நீட்டிக்க தேவை உள்ளதா என்று மாவட்ட ஆட்சியர்களின் கருத்துகளை கேட்டறிந்தார்.

    இந்நிலையில் செப்டம்பர் மாதம் பள்ளிகள், கல்லூரிகளை திறக்க வேண்டாம் என தமிழக அரசுக்கு மருத்துவ நிபுணர் குழு பரிந்துரைந்துள்ளது. அதே நேரத்தில் கடும் கட்டுப்பாடுகளுடன் பொது போக்குவரத்தை தொடங்கலாம் என்றும் மருத்துவ குழு பரிந்துரைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad