ஐ பி.எல் கிரிக்கெட் பயிற்சி வருகின்ற 15, 16 தேதிகளில் சென்னை சேப்பாக்கம் நடை பெறவுள்ளது இதில் ரெய்னா தோனி பங்கேற்கவுள்ளனர்
கொரோனா பரவல், உலக கோப்பை கிரிக்கெட் போட்டித்தொடர் உள்ளிட்ட தடைகளை கடந்த இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவதற்கான அனுமதி மத்திய அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக கிடைத்துள்ளது.
இதனை தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்காக சென்னை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆகஸ்ட் 21ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு புறப்பட்டு செல்ல இருப்பதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும் அமீரகத்திற்கு புறப்பட்டு செல்வதற்கு முன்னதாக சென்னை வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் ஆக. 16 முதல் பயிற்சியில் ஈடுபடுவர் எனவும், தோனி, ரெய்னா உள்ளிட்ட வீரர்கள் இப்பயிற்சி முகாமில் கலந்துகொள்வதற்காக ஆகஸ்ட் 15, 16 தேதிகளில் சென்னை வந்தடைவர் எனவும் அவர் தெரிவித்தார்.
அமீரகத்தில் செப்டம்பர் 19ம் தேதி தொடங்கி 53 நாட்களுக்கு ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளது. அபுதாபி, ஷார்ஜா மற்றும் துபாய் என மூன்று நகரங்களில் போட்டிகள் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் இம்முறை மதியம் மற்றும் மாலை நேர போட்டிகள் அனைத்தும் வழக்கமான நேரத்தில் அல்லாமல் அரைமணி நேரம் முன்னதாகவே தொடங்கும் எனவும் மதிய நேர போட்டிகள் 3.30 மணிக்கும், மாலை நேர போட்டிகள் 7.30 மணிக்கும் தொடங்கும் எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.மார்ச் 29ம் தேதி நடத்தப்படவிருந்த ஐபிஎல் போட்டிகள் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை