Header Ads

  • சற்று முன்

    விழுப்புரத்தில் இருளர் மாணவி தாக்கப்பட்ட சம்பவம்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு !



    விழுப்புரம் மாவட்டத்தில் சாதி சான்றிதழ் கோரி விண்ணப்பித்த பழங்குடி இருளர் சமூகத்தைச் சேர்ந்த மாணவிக்கு எதிர்ப்பு தெரிவித்து அதே கிராமத்தைச் சேர்ந்த சிலர்‌ அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து நடந்த சம்பவத்திற்கு விளக்கம் கேட்டு மனித உரிமை ஆணையம் மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    விழுப்புரம் மாவட்டத்தில் வானூர் பகுதிக்கு உள்பட்ட தி.பரங்கினி என்ற கிராமத்தில் வசித்துவரும் விவசாய கூலி தொழிலாளி முனியாண்டி என்பவரது மகள் தனலட்சுமி. பழங்குடி இருளர் சமூகத்தைச் சேர்ந்த இவர் 12ஆம் வகுப்பை நிறைவுசெய்து, தனது மேற்படிப்புக்காகக் கல்லூரிகளில் விண்ணப்பிக்க முயற்சி செய்து வருகிறார். ஆனால், சாதிச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால், மேற்கொண்டு அவரது படிப்பைத் தொடர முடியவில்லை.

    தனக்குச் சாதி சான்றிதழ் ‌வழங்கக் கோரி‌ தொடர்ந்து முயற்சித்தும், இதுவரை சான்றிதழ் கிடைக்கவில்லை என்று மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து கோட்டாட்சியர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் மாணவியின் சாதி சான்றிதழ் குறித்து ஆய்வு செய்தபோது, அதே கிராமத்தைச் சேர்ந்த வேறு சமூகத்தினர், மாணவி இருளர் சமூகத்தை சேர்ந்தவர் இல்லை என்று கூறி அவருக்குச் சான்றிதழ் வழங்கக் கூடாது என்று வலியுறுத்தினர் என்கிறார்கள் இந்த மாணவியின் குடும்பத்தினர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad