சென்னை ராயபுரம் பகுதியில் கொரோனா விழிப்புணர்வு ரோபோ ஆட்டோவை அமைச்சர்சி.விஜய பாஸ்கர் துவக்கி வைத்தார்.
பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று தடுக்கும் வகையில் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் அவர்கள் ராயபுரம் மண்டலம் வார்டு - 56 பகுதிக்குட்பட்ட பி.ஆர்.என். தோட்ட பகுதியில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கவும் நவீன ரோபோ ஆட்டோவை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சென்னை கொரோனா தடுப்பு அதிகாரி / வருவாய் நிர்வாக ஆணையாளர் டாக்டர் ஜெ.ராததாகிருஷ்ணன் இ.ஆ.ப., அவர்கள் ஆணையாளர் திரு. கோ. பிரகாஷ் இ.ஆ.ப., அவர்கள் வடக்கு வட்டார துணை ஆணையாளர் திரு. பி.ஆகாஷ் இ.ஆ.ப., அவர்கள் மண்டல அலுவலர், செயற்பொறியாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன் காணொளியை nms todyay youtube சேனலில் பார்க்கலாம்.
கருத்துகள் இல்லை