கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மை பணியாளராக பணியாற்றிய பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மை பணியாளராக பணியாற்றிய பெண்ணுக்கும், குஜராத்தில் இருந்து வந்த 4 வயது குழந்தைக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பிரிவில் பணியாற்றிய 45 வயது பெண் தூய்மை பணியாளருக்கு நேற்று முன்தினம் இரவு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் இன்று காலை 108 ஆம்புலன்ஸ் மூலமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
இதேபோல், குஜராத் மாநிலத்தில் இருந்து வந்த 4 வயது குழந்தைக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. குழந்தையின் தாய் தற்போது 5 மாத கர்ப்பிணி என்பதால், அவரது தந்தையுடன் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் அனுப்பி வைக்கப்பட்டார்.
கருத்துகள் இல்லை