திருவண்ணாமலை மாவட்டத்தில் 1594 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 பேரும், கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 47 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 1544 பேரும், மொத்தம் 1594 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மீதமுள்ள 16593 பேர் களத்தில் வேட்பாளர்கள் போட்டி இடுகிறார்கள் என்று மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 286 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என்றும், 42 மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் என காவல்துறையினர் கண்டறியப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக 24 மணி நேரமும் செயல்படும் வகையில் தேர்தல் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கட்டணமில்லா தொலைபேசி எண்1800-425-3678 மற்றும் 04175-233303 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். தேர்தலுக்காக 40 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 1105 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், போலி சான்றிதழை பயன்படுத்தி வேட்பு மனு தாக்கல் செய்ததாக வந்த புகாரை அடுத்து 5 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.
கருத்துகள் இல்லை