திருவாடானையில் தேச தந்தை மகாத்மா காந்தி 150வது பிறந்த நாளை முன்னிட்டு சமூக விழிப்புணர்வு பாதயாத்திரை நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானையில் மகாத்மா காந்தி அவர்கள் 150வது பிறந்த நாளை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் ஒன்றிய தலைவர் மகாலிங்கம் தலைமையிலும், சிறப்பு விருந்தினராக சுப்புராம் அவர்களும், மற்றும் மாவட்ட செயலாளர் முரளிதரன் ஆகியோர் கலந்து கொண்ட சமூக விழிப்புணர்வு பாதயாத்திரை நடைபெற்றது. இந்த பாதயாத்திரையானது திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு நான்கு வீதிகள் வழிகளில் பாதயாத்திரையாக வந்தார்கள். இந்த சமூக விழிப்புணர்வு பாதயாத்திரையில் பாலிதீன் ஒழிப்பு, மற்றும் சுற்றுப்புற சூழலை தூய்மையாக வைத்துக் கொள்வது பற்றியும், தூய்மை இந்தியா திட்டத்தை பற்றிய விழிப்புணர்வு பற்றிய வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும் கலந்து கொண்டார்கள். பாதயாத்திரையில் ஏராளமான பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் கலந்து கொண்டார்கள்.
கருத்துகள் இல்லை