• சற்று முன்

    விருத்தாசலம் அருகே அரசு பஸ் நடத்துனரிடம் போலீசார் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட போது நடத்துனர் மாரடைப்பால் மரணம் அடைந்ததால் பரப்பரப்பு .


    திருச்சியில் இருந்து கடலூர் நோக்கி செல்லும் அரசு பேருந்தில்  திட்டக்குடியில் காவலராக பணியாற்றும் பழனிவேல்  என்பவர் விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் ஏறியுள்ளார்.  அப்போது நடத்துனர் கோபிநாத் பழனிவேலிடம் டிக்கெட் எடுங்கள் என்று கேட்டுள்ளார்.  அப்போது காவலர் பழனிவேல், நான் போலீஸ் என்று கூறியுள்ளார். காவலர் சீருடையில் இல்லாமல் மாற்று உடையில் இருந்ததால்,  நடத்துனர் கோபிநாத் உங்களுடைய அடையாள அட்டை காட்டுங்கள் என்று கேட்டபோது,  நான் உன்னிடம் காட்ட மாட்டேன் என்று காவலர் பழனிவேல்  வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.  அப்போது இரண்டு பெரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.  பின்னர் ஊமங்கலம் அருகே வாக்குவாதத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் பொழுது,  கோபிநாத் திடீரென்று மயக்கம் போட்டு பேருந்தின் உள்ளே விழுந்துள்ளார்.  பின்னர் நெய்வேலி தனியார் மருத்துவமனையில் கோபிநாத்தை காட்டும் பொழுது அவர் இறந்ததாக கூறப்படுகிறது.  இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் காவலர் பழனிவேலை பிடித்து வைத்திருந்தனர்.  பின்னர் தகவலறிந்த மந்தாரக்குப்பம் காவல்துறையினர் பழனிவேலை அழைத்துச் சென்றுள்ளனர்.  இறந்த நடத்துனர் கோபிநாத் உடல் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் மமாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad