• சற்று முன்

    திண்டிவனம் அடுத்த வெண்மணியாத்தூரில் சர்வதேச அளவில் கால்நடை ஆராச்சி மையம் அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது


    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த வெண்மணியாத்தூர்  சிப்காட் தொழிற்பேட்டைக்குட்பட்ட பெலாகுப்பத்தில்  1000 கோடி ரூபாயில் அமைய உள்ள உணவு பதப்படுத்துதல் பூங்காவிற்கு இடம் கையகப்படுத்தும் பணிகளை தமிழக தலைமை செயலாளர் சண்முகம், நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் , கால்நடைதுறை செயலாளர் கோபால் தலைமையிலான அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் தலைமையிலான அதிகாரிகளிடம் அதற்கான பணிகள் குறித்தும்  கேட்டறிந்தார்கள். தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் ஆட்டுப்பண்ணை பகுதியில் ஆய்வு செய்த தலைமை செயலாளர் தலைமையிலான குழுவினர், அங்கு சர்வதேச அளவில் கால்நடை ஆராய்ச்சி மையம் அமைய உள்ளது தொடர்பாகவும் ஆய்வு செய்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad