• சற்று முன்

    கல்யாணம் ஆகி ஒரு வாரம் ஆகிறது. அதற்குள் 4 வயது சிறுமியை பலாத்காரம் செய்த காமுகன்


    திருப்பூர் கோல்டன் நகர் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவருக்கு வயது 34 ஆகிறது. பனியன் தொழிலாளியாக உள்ளார். இன்று காலை முதலே குடிபோதையில் இருந்த கந்தசாமி, வீட்டருகே விளையாடும் குழந்தையை பார்த்துவிட்டான். உடனே தன் வீட்டுக்குள் 4 வயது சிறுமியை  தூக்கி சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்த தொடங்கி உள்ளார்.
    இதனிடையே விளையாடி கொண்டிருந்த குழந்தையை காணோமே என்று அவளது பெற்றோர் தேடி கொண்டிருந்தனர். அப்போதுதான், கந்தசாமி வீட்டில் இருந்து குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு பதறி ஓடினர். வீட்டிற்குள் நுழைந்து பார்த்த போது சிறுமியை கந்தசாமி நாசம் செய்து கொண்டிருந்ததை பார்த்து கொதித்து போய்விட்டனர்.
    ஆத்திரம்
    கந்தசாமி மீது  ஆத்திரமடைந்த பெற்றோரும், பொது மக்களும் கந்தசாமியை பிடித்து அங்கிருந்த ஒரு மரத்தில் கட்டி வைத்து சட்டையை உருவி சரமாரியாக தாக்கினர். பெண்கள், தங்கள் செருப்பை கழட்டி அடித்தனர். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வடக்கு போலீசார் வந்தனர்.
    கைது
    கந்தசாமியை மீட்கும்போது, "அறுத்துபுடுங்க சார் இவனை.. உயிரோட விடாதீங்க.. பாவம் எல்லாம் பார்க்காதீங்க.. 4 வயசு குழந்தைகூட இவன் கண்ணுக்கு தெரியலயே" என்று ஆவேசத்தில் சொன்னார்கள். இதையடுத்து போலீசார் கந்தசாமியை கைது செய்து ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர்.
    4வயது சிறுமி என்று பாராமல் பலத்காரம் செய்த காமுகனை உயிரோடு விடாதீங்க அறுத்துடுங்க சார். என்று பொது மக்கள் பெண்கள் கொதித்தனர் ; 
    இச் சம்பவத்தால் அப்பகுதியை பெரும் பரபரப்பில் மூழ்கியது. 





    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad