காசுகளில் கணபதி நூல் வெளியீட்டு விழா
திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் காசுகளில் கணபதி நூல் வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற்றது.
நூலினை திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க தலைவர் விஜயகுமார் வெளியிட நாணயவியல் சேகரிப்பாளர் தாமோதரன், திருச்சிராப்பள்ளி நாணயவியல் கழக தலைவர் சார்லஸ், திருச்சிராப்பள்ளி தபால்தலை சேகரிப்பாளர் கிளப் நிறுவனர் நாசர், ஹாபீஸ் நிறுவனர் மதன் உள்ளிட்டோர் நூலினை பெற்றுக்கொண்டார்கள் பணத்தாள்கள் சேகரிப்பாளர்கள் ரமேஷ், முகமது சுபேர் ,பாண்டியன், கமலக்கண்ணன் ,சந்திரசேகரன் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள். முன்னதாக செயலர் குணசேகரன் வரவேற்றார் . பொருளாளர் அப்துல் அஜீஸ் நன்றி கூறினார்
கருத்துகள் இல்லை