சொன்னதைச் செய்யும் கனிமொழி.! தொடரும் மக்கள் பணி.! 💥
தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கயத்தாறு மேற்கு ஒன்றியம் தெற்கு இலந்தைக்குளம் ஊராட்சியில் திருமிகு. கனிமொழி கருணாநிதி எம்பி., அவர்கள் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு கடந்த 12-08-2019 அன்று நடைபெற்றது.! அப்போது மானங்காத்தான் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சுப்பையா என்பவர் தனக்கு மூன்று சக்கர வாகனம் அளிக்குமாறு கோரிக்கை வைத்திருந்தார். தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதி மக்களின் கோரிக்கைகளை தன்னால் இயன்ற அளவு உடனுக்குடன் நிறைவேற்றுவேன் என உறுதியளித்திருந்த அக்கா கனிமொழி எம்பி., அவர்கள் அதற்கான ஏற்பாட்டை உடனே செய்தார்.!
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் திருமதி. கீதாஜீவன் எம்எல்ஏ., அவர்கள் வழிகாட்டுதலின் படி கயத்தாறு மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் திரு. கருப்பசாமி அவர்கள் அந்த மாற்றுத்திறனாளியிடம் மூன்று சக்கர வாகனத்தை ஒப்படைத்தார்.!
அப்போது ஊராட்சி செயலாளர்கள் ஆறுமுகம், கிருஷ்ணசாமி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மகாராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.!
கருத்துகள் இல்லை