Header Ads

  • சற்று முன்

    புதிய கல்விக் கொள்கை என்பது நீட்டை விட கொடூரமானது - திரைப்பட இயக்குனர் வ.கௌதமன்


    கோவில்பட்டியில் தமிழ் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளரும், திரைப்பட இயக்குனரமான  வ.கௌதமன் செய்தியாளர்களிடம் பேசுகையில் கோவில்பட்டி நகரம் என்பது கடலை மிட்டாய்க்கு பெயர் போன ஊர்,கோவில்பட்டி நகரின் பிரதான சாலையின் அருகே ஒரு காலத்தில் நல்ல நீராக ஓடிய சாக்கடை மீது இன்றைக்கு பெரிய பிள்ளர்களை ஏற்படுத்தி பிரம்மாண்டமாக கட்டப்பட்ட வணிக நிறுவனங்கள் இன்று முளைத்து நிற்கிறது,இதனால் மழை காலங்களில் சாக்கடை நீர் சாலைகளிலும் ஊர் முழுவதும் பரவி நோய் கிருமிகளை உருவாக்குகிறது என்பது தெரிகிறது,கடந்த 50 ஆண்டுகளாக இந்த ஆக்கிரமிப்பு நடந்து கொண்டிருப்பது என்பதுதான் மிகப் பெரிய வன்முறை,ஐம்பது ஆண்டுகளாக இந்த ஆக்கிரமிப்பு தொடர அரசு இயந்திரங்கள் கையூட்டு பெறமால் இது சாத்தியமாக முடியாது,கதிரேசன் கோவில் மலையில் இருந்து வேப்பங்குளம் கண்மாய் வரை இந்த நீர் ஓடை ஓடிக்கொண்டிருந்தது,2010இல் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் ஏன் அகற்றவில்லை,2018 இல் ஆக்கிரப்பு கடைகளுக்கு நகராட்சி வரியை ரத்து செய்த பிறகும் ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை, ஆனால் இதற்கு மாற்றாக அதற்கு அருகில் ஒரு ஓடை (சாக்கடை கால்வாய்) அமைக்கப்பட்டு வருகிறது,இதிலும் முறைகேடுகள் நடந்து இருக்கும்,இதற்க்கான டெண்டரை அரசு ரத்து செய்ய வேண்டும்,இந்த ஓடையை கூட ஆக்கிரமிப்பாளர்கள் நிச்சயமாக ஆக்கிரமிப்பு செய்வார்கள்,சில முக்கிய கட்சிகள் கையூட்டு வாங்காமல் இந்த நிறுவனங்கள் 50 ஆண்டுகள் இங்கே தொடர்ந்து இருந்திருக்காது,ஓடை கடை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக தொடர்ந்து போராடி வரும் ஐந்தாவது தூண் தலைவர் சங்கரலிங்கத்திற்கு தொடர்ச்சியாக கொலை மிரட்டல் வருகிறது,இந்த ஓடைக்கடை ஆக்கிரமிப்புகளை அகற்ற முதல்வர் துணை முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,நீதிமன்றத்தின் உத்தரவு எங்களின் கோரிக்கைகளை தமிழக அரசு கேட்கவில்லை என்றால் கடுமையான அறவழி உக்கிரமான போராட்டம் நடைபெறும்,வீர வாஞ்சிநகர். மறவர் காலனி பகுதியில் பட்டா இல்லாமல் இருக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும்,சொந்த நாட்டில் வாழ்வதற்கான உரிமை இருக்கிறதா இல்லையா என்பது கூட தமிழினத்திற்கு தெரியவில்லை,திரும்பிய திசையெல்லாம் ஓலங்கள், ஒப்பாரிகள் விவசாயிகள் மரணம் மீனவர்கள் மரணம், நீட் தேர்வினால் 9 மாணவர்கள் மரணம், பச்சைப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்,50 ஆயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட எங்கள் தமிழ் இனத்தின் மொழி மீது கை வைத்தாலோ, நிலம் மற்றும் வளம் மீது கை வைத்தாலோ ,அதை எல்லாம் வேடிக்கை பார்க்கிற மலட்டு கூட்டம் அல்ல, நாங்கள் போய் நின்று நடத்திய ஜல்லிக்கட்டு, கத்திபாரா போராட்டம், நெடுவாசல் கதிராமங்கலம், ஜ.நா சபை போராட்டங்களை பார்த்து இருக்கிறார்கள்.அதை சந்திக்க தயார் என்றால் போராட்டம் நடத்த தயார்.கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள மாணவர்கள். இளைஞர்கள், மானமுள்ள தமிழர்களை திரட்டி நாங்கள் போராட்டத்தை கையில் எடுப்போம்

    அனிதா முதல் கீர்த்தனா வரை 9 பேர் நீட் தேர்வினால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்,அதிகார வர்க்கத்தினர் உயர் சாதியினருக்கு மட்டுமே அரசியல் செய்வது, அதிகாரத்தை பயன்படுத்துவது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.தமிழகத்தில் மட்டும்தான் 6300க்கு மேற்பட்ட மருத்துவ இடங்கள் உள்ளன.ஆனால் அரசு பள்ளியில் பயின்ற ஒரே ஒரு மாணவன் மட்டும் தான் இந்த ஆண்டு மருத்துவக் கல்லூரிக்கு சென்று உள்ளார்.2500 இடங்களில் கூட தமிழக மாணவர்கள் செல்ல முடியவில்லை,3500க்கும் மேற்பட்ட வடமாநில பிள்ளைகள் இங்கு வந்து மருத்துவம் படிக்கிறார்கள்.இதே நிலை பொறியியல், சட்டம், கலை அறிவியல் கல்லூரியில்  வர போகிறது

    தமிழகத்தில் தமிழன் வாழ முடியாத, வாழக்கூடாத ஒரு சூழ்நிலையை இந்திய அதிகார வர்க்கம் திட்டமிட்டு உருவாக்கி இருக்கிறது.அதற்கு காரணம் ஒரு மொழியை ( இந்தி) ஏற்றுக் கொள்ள என்ற ஒரே காரணத்திற்காக,இந்தியா முழுவதும் அத்துமீறல்கள் மற்றும் கனவு திட்டங்களுக்கு தமிழகம் தடையாக இருப்பதால் கல்வி மற்றும் வேலை உரிமையைப் பறித்து, வாழ்வியல் உரிமையும் பறித்து விட்டால் இந்த மண் அடிமையாகும் கைகட்டி தமிழினம் தங்களுக்கு தலையாட்டும் என்பது அவர்களின் எண்ணம்,எங்க வீட்டுப் பிள்ளைகள் தொடர்ந்து உயிர் இழப்பதை இதற்கு மேலும் பொறுத்துக் கொள்ள முடியாது.நீட் என்ற எமன் தமிழகத்தில் இல்லாத ஒரு நிலையைஅவர்கள் உருவாக்க வேண்டும் இல்லையென்றால் நாங்கள் உருவாக்குவோம்.இங்கு வளர்ந்து இருக்கும் அரசியல் கட்சிகள் பெயருக்கு அறிக்கையும் சொற்பொழிவுகளையும் நிகழ்த்திக் கொண்டு போய்க் கொண்டே இருக்கிறார்கள்,நீட் ஒரு எமன் என்றால் அதைவிட பல நூற்றுக்கணக்கான மடங்கு ஒரு பெரு எமன் புதிய கல்விக் கொள்கை,இந்தக் கல்விக் கொள்கையால் பத்தாம் வகுப்பு கூட தாண்ட முடியாமல் பல லட்சக்கணக்கான பிள்ளைகள் படிப்பு மறந்து வேலையில்லாத வாழ்வியல் சூழல் ஏற்படும்.புதிய கல்விக் கொள்கை என்பது நீட்டை  விட கொடூரமானது
    , இதை அத்தனையும் இந்த மண்ணை விட்டு அப்புறப்படுத்த மண்ணை ஆண்டவர்கள்., ஆள்பவர்கள் தங்கள் உறுதியான செயல் திட்டத்தை கையில் எடுத்து செய்து முடிக்க வேண்டும் அப்படி இல்லை என்றால் இது வெறும் சொல் அல்ல ஒரு அத்தோடு நின்று போராடுகிற ஒரு தமிழனாக சொல்கிறேன். ஜல்லிக்கட்டை தாண்டிய பெரும் புரட்சி, போராட்டம் தமிழ் மண்ணில் எழும், எங்கள் மண்ணில் எங்கள் அனுமதி இல்லாமல் இந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் எரிமலையாக நின்று அறவழி போராட்டத்தை கையில் எடுப்போம் இறுதி வெற்றி எங்களின் வெற்றியாக இருக்கும்,மருத்துவத்தை இன்று உலகம் முழுவதும் ஆளுகிற இனமாக தமிழினம் இருக்கிறது,இந்தி படித்தால்தான் உரிமை கொடுப்பார்கள் என்றால், கடைசியாக 5 ஆண்டுகளில் ஒரு கோடி 14 லட்சம் பேர் இந்திப் படத்தில் பஞ்சம் பிழைப்பதற்காக தமிழகம் வந்துள்ளனர்.தலைசிறந்த பொறியாளர்கள், தலைசிறந்த மருத்துவர்கள் வல்லுனர்களையும் கலைஞர்களையும் கொண்ட ஒரு மண் தமிழ் மண்,புதியதாக ஒரு கல்விக் கொண்டு அறிவாளியாக ஆக்க வேண்டிய அவசியமில்லை.தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறுத்த நீட், ஹைட்ரோகார்பன் நியூட்ரினோ திட்டங்கள் எல்லாவற்றையும், தற்போதைய ஆட்சியாளர்கள் எப்படி அனுமதித்தார்கள்.மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று ஜெயலலிதா தடை செய்த திட்டங்களை இவர்கள் கொண்டுவந்து மூலமாக தமிழக மக்களுக்கு மட்டும் இவர்கள் துரோகம் செய்யவில்லை ஜெயலலிதா அவர்களுக்கு துரோகம் செய்து உள்ளார்கள்.ஜெயலலிதா ஆட்சி தான் தற்போதைய ஆட்சி என்றால் அவர் தடை செய்த அத்தனையும் இவர்கள் தடை செய்ய வேண்டும்,ஹைட்ரோ கார்பன் மீத்தேன் தொடர்பாக ஒரு வல்லுனர் குழுவை அமைத்து 2015 ஜெயலலிதா ஒரு தடை அரசு ஆணை போட்டார் .அந்த அரசாணையை உடனடியாக தற்போதைய அரசு நீட்டிக்க வேண்டும்.தமிழக மக்களுக்கு எதிராக தொடர்ந்து திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு , தமிழகத்தில் வெல்வோம் என்று பாஜகவும் ,அதன் மாநிலத் தலைவரும் கூறிவருவது பகல் கனவு,கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வரலாறு படம் சிங்கள பெருமைகளைக் கூறும் படமாக இருந்தால் அதை எதிர்க்கலாம்,முத்தையா முரளிதரனின் வாழ்க்கையாக இருந்தால் அதை பரிசீலனை பண்ண வேண்டும்,ஒரு படைப்பு எடுக்கப் போவதாக அறிவித்த உடனே எதிர்ப்பது எனக்கு சரியானதாக படவில்லை,தமிழினத்திற்கு எதிரான கொச்சைப்படுத்தும் வகையில் படைப்பாக இருந்தால் 100% இல்லை அதை தாண்டி உறுதியாக எதிர்க்கலாம். ஒரு செய்தியைமட்டும் வைத்து உடனடியாக எதிர்ப்பு தெரிவிப்பது படைப்புச் சுதந்திரத்தில் அத்துமீறிய செயலாக தான் பார்க்க முடியும் என்றார்

    பேட்டியின் போது ஏறு தழுவுதல் பாதுகாப்பு இயக்க தலைவர் புதுக்குடி எம்.எஸ்.ராஜா,
    5வது தூண் அமைப்பின் தலைவர் சங்கரலிங்கம், சமூகநீதி கூட்டமைப்பு தலைவர் தமிழரசன், மாமன்னர் புலித்தேவர் மக்கள் நல இயக்க தலைவர் செல்லத்துரை என்ற செல்வம், ஐ.என்.டி.யூ.சி பொதுச் செயலாளர் ராஜசேகர்,  அண்ணா தொழிற்சங்கம் ராமகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தார்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad