ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஒரு கோடி 97 லட்சம் மதிப்புள்ள பழைய நோட்டுகளை மாற்ற முயன்ற பெண்கள் உட்பட 4 பேர் கைது
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த கும்பல் ஒன்று பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை நூதன முறையில் மாற்றி புதிய ரூபாய் நோட்டுக்களை பெற முயற்சி செய்தது. இதற்காக நான்கு சக்கர வாகனத்தில் போலீஸ் பலகையுடன் சுற்றி வந்தது . பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வாங்குவோருக்கு ரூபாய் ஒரு லட்சத்திற்கு 3 லட்சம் மதிப்புள்ள ரசாயனம் தடவிய கருப்பு நோட்டுக்கள் வழங்கப்படும் என்றும் நாங்கள் தரும் ரசாயன திரவத்தில் கழுவினால் தற்போது புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுக்கு கிடைக்குமென கூறி மக்களை ஏமாற்றி வந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது தொடர்ந்து விசாகப்பட்டினம் போலீஸ் அதிகாரி சிபி மீனா தலைமையில் போலீசார் அவர்களை சுற்றிவளைத்து பிடித்தனர். இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ரூபாய் 1 கோடியே 96 லட்சம் மதிப்புள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் கைத்துப்பாக்கி பணம் என்னும் இயந்திரம் மற்றும் ரசாயனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை