Header Ads

  • சற்று முன்

    1 கோடி ரூபாய் கடன் பெறும் புதிய திட்டத்தை பாரத பிரதமர் அறிமுகப்படுத்தினார்


    நாடு முழுவதும் உள்ள  சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, 59 நிமிடங்களில் 1 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்கும் திட்டத்தை,  பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.

    டெல்லியில் நேற்று நடைபெற்ற விழாவில் பங்கேற்ற பாரத பிரதமர் மோடி , இப்புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தினார். தீபாவளி பரிசாக மத்திய மற்றும் சிறுதொழில்களின் வளர்ச்சிக்காக, புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் உலகளவில் நான்காவது தொழில் புரட்சிக்கு, இந்தியா தலைமை தாங்கும் நிலை உருவாகும், என்றும் பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டார். 

    உலக வங்கி சமீபத்தில் வெளியிட்ட, சுலபமாக தொழில் தொடங்க தகுதியான நாடுகள் பட்டியலில், இந்தியா 23 இடங்கள் முன்னேறியுள்ளதை சுட்டிக் காட்டிய பிரதமர்,  சிறுதொழில் வளர்ச்சியினால், இந்தியா இந்த நிலையை எட்டியுள்ளதாக குறிப்பிட்டார். மேலும், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் எளிதாக வங்கி கடன்களை பெறும் வகையில், 59 நிமிடங்களில் ஒரு கோடி ரூபாய் வரை, எளிதாக கடன் பெறும் வசதி,  தொடங்கப்படுவதாகவும், பிரதமர் மோடி அறிவித்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad