Header Ads

  • சற்று முன்

    திருவண்ணாமலையில் தமிழக வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர்களை இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்


    தமிழகம் முழுவதும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பணி புரியும் சங்க செயலாளர்களின் பதவியை பொதுப்பணி நிலைத்திறன் கீழ் கொண்டு வந்து தமிழக அரசு ஆணை யிட்டுள்ளது. அதன்படி திருவண்ணா மலை மாவட்டத்தில் உள்ள 159 கூட்டுறவு கடன் சங்கங் களில் முதற்கட்டமாக 9 சங்க செயலாளர்களை மாவட்டத் தில் உள்ள பல்வேறு கூட்டுறவு கடன் சங்கத்திற்கு இடமாற்றம் செய்து திருவண்ணாமலை மண்டல கூட்டுறவு சங்கங் களின் இணை பதிவாளர் நந்தகுமார் கடந்த சில நாட் களுக்கு முன்பு உத்தர விட் டார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித் தும், பணியிட மாற்றத்தை திரும்ப பெறவும் கூட்டுறவு செயலாளர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் திருவண்ணா மலை கூட்டுறவு அலுவலக வளாகத்தில் உள்ள இணை பதிவாளர் அலுவலகத்தை கூட்டுறவு செயலாளர்கள் நேற்று முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் இணை பதி வாளரை சந்தித்து இடமாறுதல் உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தினர்.முற்றுகையின் போது இட மாறுதலால் மனஉளைச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வந்த வாசி கூட்டுறவு கடன் சங்கத் தின் செயலாளர் சம்பத்ராவ், முற்றுகையில் கலந்து கொள் வதற்காக கையில் குளுக்கோஸ் ஏற்றப்பட்ட நிலையிலேயே அங்கு வந்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் ஓரிரு நாளில் உரிய முடிவு எடுப்ப தாக இணை பதிவாளர் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

    பின்னர் தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் கள் சங்க மாநில பொருளாளர் சேகர் நிருபர்களிடம் கூறிய தாவது:-
    திருவண்ணாமலை மாவட் டத்தில் சிறப்பாக செயலாற்றி வந்த சங்க செயலாளர்களை இடமாற்றம் செய்துள்ளனர். அவர்களில் 2 பேர் சங்க வளர்ச்சிக்காக பாடுபட்டவர் கள். இந்த செய்தியால் மன உளைச்சல் ஏற்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். அவர்களை இடமாற்றம் செய்யக் கூடாது.
    இடமாற்றத்தை திரும்ப பெறுவது குறித்து அதிகாரிகள் ஓரிரு நாட்களில் முடிவு எடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ள னர். முறையான நடவடிக்கை எடுக்காவிட்டால் மாவட்டம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபடுவோம். தமிழகம் முழு வதும் அரசு தற்போது ஆணை யிட்டுள்ள இந்த பணி மாறு தலில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளது. முரண்பாடுகளை களைந்து சரியான முறையில் பணிமாறுதல் வழங்க வேண்டும். 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad