திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு பேரணி
திருச்சி ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் தன்னாட்சிக் கல்லூரி பன்னாட்டு இளையோர் எக்ஸ்னோரா ஐடிசி அமைப்பு சார்பில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு பேரணி கல்லூரி வளாகத்தில் இருந்து ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் வரை நடைபெற்றது. விழிப்புணர்வு பேரணியினை கல்லூரி முதல்வர் ராதிகா பன்னாட்டு இளையோர் எக்ஸ்னோரா நிறுவனர் மோகன் உள்ளிட்டோர் துவங்கி வைத்தனர்.திடக்கழிவு மேலாண்மை என்பது வீடுகள்,வணிக வளாகங்கள்,தொழிற்சாலைகள் மற்றும் சுரங்கங்களிலிருந்து கிடைக்கும் தேவையில்லாத பயன்படுத்தப்பட்ட திடப் பொருள்களை சரியான முறையில் நிர்வகிக்கும் செயலாகும். இவை சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றன. உதாரணமாக பேப்பர் , ரப்பர் , பிளாஸ்டிக் பொருட்கள் , கண்ணாடிகள் , தோல் பதனிடும் தொழிற்சாலை கழிவுகள் போன்றவையாகும்.
இக்கழிவுகளை எரிக்கும் போது வளிமண்டலத்தையும், மண்ணில் இடும் போது நீர் மற்றும் நிலத்தினையும் மாசுபடுத்துகிறது. நோயை உண்டாக்கும் நுண்ணுயிரியுள்ள மருத்துவமனைக் கழிவுகள் பல நோய்கள் ஏற்படக் காரணமாகின்றன.மீள் சுழற்சிக்குப் பயன்படும் பேப்பர் , உலோகம் பொறுக்குபவர்களுக்கு தோல் நோய்கள், சுவாசக் கோளாறுகள்,கண் எரிச்சல் மற்றும் இரைப்பைத் தொற்றுநோய் போன்றவை ஏற்படுத்துகின்றன.குளோரின் உள்ள திடக்கழிவுகளை எரிக்கும் போது அதிலிருந்து வெளிவரும் டையாக்சின் ,ப்யூரான் வாயுக்களை சுவாசிக்கும் போது மலட்டுத்தன்மை ஏற்படுகிறது. நச்சு திடக்கழிவுகள் உணவுச்சங்கிலி மூலம் உடலில் சேமிக்கப்பட்டு புற்றுநோய் போன்ற தீய விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
திடக்கழிவு மேலாண்மையினால் மக்களை நோயிலிருந்து பாதுகாக்கப்படுகிறது .மறுசுழற்சி செய்வதன் மூலம் இயற்கை வளம் காக்கப்படுகிறது சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பயன்படுகிறது என்பதனை வலியுறுத்தி விழிப்புணர்வு பதாகைகளுடன் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் பேரணியில் பங்கேற்றவர்கள் கல்லூரி எக்ஸ்னோரா ஒருங்கிணைப்பாளர்கள் முத்துக்குமார் வசந்தி உள்ளிட்டோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தார்கள்
கருத்துகள் இல்லை