பெரியகுளம் அருகே ,சருத்துப் பட்டியில் காவல் துறையினர் அராஜகம்
பெரியகுளம் அருகே ,சருத்துப் பட்டியில் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைக்க முயன்ற மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உட்பட காவல் துறையினர் 10 பேருக்குக் காயம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் காவல்துறையினர் குவிப்பு, பதட்டம் .தேனி மாவட்டம் , பெரியகுளம் அருகே உள்ள இலட்சுமிபுரத்தைச் சேர்ந்த முரளி என்பவருக்கும் சருத்துப் பட்டியைச் சேர்ந்த ரஞ்சித் என்பவருக்குமிடையே கடந்த நான்கு தினங்களுக்கு முன்புநடந்த தகராறில் காயமடைந்த முரளி என்பவர் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனைத் தொடர்ந்து இலட்சுமிபுரம் பகுதி பொது மக்கள் நேற்று முன்தினம் முரளியைத் தாக்கிய சருத்துப் பட்டியைச் சேர்ந்தவர்களைச் சேர்ந்தவர்களைக் கைது செய்யக் கோரி தேனி - பெரியகுளம் தேதிய நெடுஞ் சாலையில் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்களை சருத்துப் பட்டியைச் சேர்ந்தவர்கள் எனக் கருதி இரண்டு பேரையும் இலட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர்கள் சரமாரியாகத் தாக்கியதில் காவல்துறையினர் அவர்களைமீட்டு விசாரித்த போது இவர்கள் இருவரும் பெரியகுளம் தென்கரை இந்திரா புரியைச் சேர்ந்த அஜித்குமார், மற்றும் சுரேந்தர் ஆகியோர் என்பது தெரிய வந்தது. அவர்கள் இருவரும்,பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனையறிந்த இவர்களது உறவினர்கள் பெரியகுளம் மூன்றாந் தல் பகுதியில் நேற்று அஜித்குமார், சுரேந்தர் ஆகியோரை த் தாக்கிய இலட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர்களை கைது செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர் .இத்தகவல் அறிந்த பெரியகுளம் காவல்துணைக் கண்காணிப்பாளர் ஆறுமுகம் தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தியதில் குற்றவாளிகளை கைது செய்வதாகக் கூறியதையடுத்து மறியலைக் கை விட்டனர்.
இந்நிலையில் இதனைத் தொடர்ந்து இன்று தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் சருத்துப் பட்டியைச் சேர்ந்த சிரஞ்சீவி என்பவர் தேவதானப்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போது அவரை மர்ம நபர்கள் தாக்கியதில் காயம் அடைந்தார் எனவும், அவர் பெரியகுளம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்து மனை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் அைவம்இவர் தாக்கப்பட்டது இலட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவியதையடுத்து சருத்துப் பட்டி விலக்கில் பெரியகுளம் - தேனி தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களைக் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்திக்கலைக்க முயன்ற போது காவல்துறையினர் மற்றும் அந்த பகுதி மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பின் மோதலாக மாறி காவல் துறையினர் தடியடி நடத்தவே சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கல்வீசித் தாக்கியதில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உட்பட காவலர்கள் 10 பேர் காயமடைந்து பெரியகுளம் அரசு மருத்துவமனையிலும், தேனி க.விலக்கு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் காவல் துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் கண் அருகில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவரை தேனி மருத்துவ மனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை மருத்து மனைக்குஅனுப்பி வைக்கப்பட்டார் . இதனைத் தொடர்ந்து இலட்சுமிபுரம், சருத்துப் பட்டி ஆகிய பகுதிகளில் தாக்கப்பட்டவர்களும், தாக்கிய வர்களும், வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பதட்டம் நிலவுகின்றது மேலும் பதட்டத்தைத் தணிக்க நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்
மோதலில் ஈடுபட்டவர்களை விட்டு,விட்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர்களை காவல் துறையினர் அத்து மீறி தாக்கியதில் சருத்துப்பட்டியை சேர்ந்த ஜெயக்கண்ணண், முத்து, முத்துநாகு, காளியம்மாள் ஆகிய நான்குபேர்களை 20 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் வீட்டின் மாடி ஏறி குதித்து வந்து தாக்கியதாக குற்றசாட்டுஎழுந்துள்ளது. இவர்களும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடதக்கது.
கருத்துகள் இல்லை