மாற்றுத்திறனாளி பள்ளியை வேறு இடத்திற்கு மாற்றியதை கண்டித்து பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்
நெல்லிக்குப்பத்தில் மாற்றுத்திறனாளி பள்ளி நகராட்சி துவக்கப்பள்ளியில் இரண்டு ஆண்டுகளாக இயங்கி வருகிறது இந்தப் பள்ளியில் சுமார் 15 மாணவ மாணவிகள் பயின்று வந்தனர் இந்த ஆண்டு பள்ளி துவக்கத்தின் முதல் நாளில் பெற்றோர்களுக்கு பெற்றோர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாகவும் இந்த கூட்டத்தில் இனிமேல் இந்தப் பள்ளி நெல்லிக்குப்பத்தில் உள்ள திருக்கன்டேஸ்வரம் அரசு பள்ளியில் இயங்கும் என்று பள்ளியின் வட்டார வள மேற்பார்வையாளர் லட்சுமி அவர்கள் கூறியுள்ளார் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எங்களால் இவ்வளவு தூரம் மன வளர்ச்சி இல்லாத பிள்ளைகளை வைத்துக் கொண்டு பயணித்து வரமுடியாது என்று பெற்றோர்கள் கூறினார்கள் அதனை மேற்பார்வையாளர் லட்சுமி அவர்கள் பரிசீலனை செய்வோம் என்று கூறி அனுப்பிவைத்தனர்
ஆனால் பள்ளி தொடங்கி ஒரு வாரம் ஆகும் நிலையில் இந்த திருக்கண்டீஸ்வரம் பள்ளியில்தான் இந்தப் பள்ளி இயங்கும் நீங்கள் இந்தப் பள்ளிக் கூடத்திற்கு உங்கள் பிள்ளைகளை அழைத்து வந்து ஆக வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் எங்களால் அந்தப் பள்ளிக்கூடத்திற்கு சென்று வர இயலவில்லை என்றும் நாங்கள் ஒரு நாள் முழுவதும் அங்கேயே காலை முதல் மாலை வரை பள்ளியில் தங்கும் நிலை வருவதால் எங்கள் வாழ்வாதாரம் கெட்டு விடுவதாகவும் அதனால் இதே பள்ளியில் அனுமதிக்குமாறும் கோரிக்கை முழக்கங்களை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
கருத்துகள் இல்லை