Header Ads

  • சற்று முன்

    அடுத்த பிரதமர் மோடியா - ராகுலா என்றால் ராகுலே என்று அதிகமானோர் கூறியுள்ளனர்


    தமிழகத்தின் 39 மக்களவைத் தொகுதிகளில் ஆப் நிறுவனம் மற்றும் முன்னனி  தொலைக்காட்சி இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில், அடுத்த பிரதமராக ராகுல் காந்தி வரவேண்டும் என 53.20 சதவீதம் பேர் கருத்துக் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பல்வேறு நிறுவனங்கள் கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. அதன்படி, தமிழின் முன்னணி செய்தி தொலைக்காட்சி மாநிலத்தில் உள்ள 39 தொகுதிகளில் கருத்துக்கணிப்புகளை மேற்கொண்டது. 

    இதில், எந்த கூட்டணிக்கு எவ்வளவு தொகுதிகள் கிடைக்கும்? தமிழகத்தில் மிகவும் பிடித்த அரசியல் கட்சித் தலைவர் யார்? நடப்பு மத்திய அரசின் ஆட்சி எவ்வாறு இருந்தது? அடுத்து பிரதமராக யார் வர வேண்டும்? பிரதமர் மோடியின் செயல்பாடு என்ன? எந்தப் பிரச்னை தேர்தலில் முக்கியத்துவம் பெறும்? மோடி அரசு மீண்டும் பதவிக்கு வரவேண்டுமா? உள்ளிட்ட கேள்விகள் தமிழக மக்களிடம் முன்வைக்கப்பட்டன. 

    அவற்றில், மோடி அரசு மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமா? அல்லது புதிய அரசு அமைய விரும்புகிறீர்களா? என்ற கேள்விக்கு மோடி அரசு 21.30 சதவீதம் பேரும், புதிய அரசு 70.02 சதவீதமும், பிற கருத்து 1.85 சதவீதமும், தெரியாது என 6.85 சதவீதம் என்ற கருத்து தெரிவித்துள்ளனர்.
    அதேபோல தமிழகத்தில் மக்களுக்கு மிகவும் பிடித்த அரசியல் கட்சித் தலைவர் யார் என்ற கேள்விக்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் என 31.01 சதவீதத்தினரும், எடப்பாடி பழனிசாமி என 9.66 சதவீதத்தினரும், ஓபிஎஸ் என 6.16 சதவீதத்தினரும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் என 5.54 சதவீதத்தினரும், கமல்ஹாசன் என 4.14 சதவீதத்தினரும் விஜயகாந்த் என 4.14 சதவீதத்தினரும், அன்புமணி ராமதாஸ் என 3.82 சதவீதத்தினரும், டிடிவி தினகரன் 3.78 சதவீதத்தினரும், திருமாவளவன் 1.17 சதவீததினரும், பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் 0.84 சதவீதத்தினரும் பதிலளித்துள்ளனர். 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad