Header Ads

  • சற்று முன்

    பிரதமர் மோடிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கோரிக்கை


    சென்னை: "பிரதமர் மோடிக்கு ஒரு கோரிக்கை, தமிழ்நாட்டை இந்தியாவின் ஒரு பகுதியாக கருத வேண்டும். வெற்றி பெற்ற மாநிலங்களுக்கு இணையாக தமிழகத்தையும் மோடி கருத வேண்டும். ஒரு தமிழனாக, இந்தியனாக, இந்திய குடிமகனாக இதை நான் பிரதமருக்கு கோரிக்கையாக வைக்கிறேன்" என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். பாஜக என்றாலே, அதாவது இந்துத்துவா என்றாலே கமலுக்கு ஆகாது. கிளீன் இந்தியாவில் விளம்பர தூதராக சேர்த்ததுகூட மாநிலத்தின் புகழ்மிக்க ஒரு நபர் என்ற முறையில்தான் என்பதை புரிந்து கொள்ளாமல், அறிவிப்புக்கு பிறகு கமலுக்கு நிறைய விமர்சனங்கள் எழ ஆரம்பித்தன.இதற்கு ஒரே காரணம், மாநில அரசு மீது குறையாக சொல்லும் கமல், மத்திய அரசை ஒருமுறை கூட விமர்சித்து கருத்து சொல்லவில்லை என்று பகிரங்கமாக சொல்லப்பட்டது.

    சொம்பு தூக்கி
    ஆனால் பாஜகவின் நிழல், பாஜகவின் சொம்பு தூக்கி என்று கமல் மீது செலுத்தப்பட்ட அம்புகள் ஒவ்வொன்றாக கழண்டு விழ ஆரம்பித்தன. சரமாரி குற்றச்சாட்டுகள் பாஜக மீது பதிலுக்கு தொடுத்தார். எச்.ராஜா டென்ஷன் ஆகும் அளவுக்கு விமர்சித்தார்.
    பாஜகவாதியா? கடைசியில் பள்ளப்பட்டி பிரச்சாரத்தில் "சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து" என்று கமல் கொளுத்தி போட, அது நாடு முழுவதும் கொழுந்துவிட்டு எரிய... கோர்ட், கேஸ் வரை சென்ற இந்த விவகாரத்தில், மோடியே உள்ளே நுழைந்து, "எந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது" கமலுக்கு பதில் சொல்ல.. என்று விவகாரம் பெரிதானது. இப்போது பாஜகவின் நேர் எதிரி என்ற பெயரை சுமந்துள்ளார் கமல். தான் ஒரு பாஜகவாதி அல்ல என்பதை பழிசொன்ன மக்களுக்கு நிரூபிக்க இத்தனை நாள் ஆகி உள்ளது! தமிழன் இந்நிலையில் மேலும் பாஜக மீது அம்பு தொடுத்துள்ளார் கமல். செய்தியாளர்களிடம் இன்று பேசியபோதுகூட, மத்திய அரசின் திட்டத்துக்கு தனது எதிர்ப்பை கடுமையாக பதிவு செய்தார். கூடவே மோடிக்கு ஒரு கோரிக்கையையும் முன் வைத்துள்ளதை எந்த தமிழனாலும் புறந்தள்ளவே முடியாது. கமல் பேசியதாவது:

    பிரதமருக்கு கோரிக்கை 
    தமிழகத்தை எழுச்சி மிகு மாநிலமாக்குவதே எங்களது இலக்கு. இடையில் வந்து போகும் தேர்தல்களைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. ஆனால் பிரதமர் மோடிக்கு ஒரு கோரிக்கை, தமிழ்நாட்டை இந்தியாவின் ஒரு பகுதியாக கருத வேண்டும். வெற்றி பெற்ற மாநிலங்களுக்கு இணையாக தமிழகத்தையும் மோடி கருத வேண்டும். ஒரு தமிழனாக, இந்தியனாக, இந்தியக் குடிமகனாக இதை நான் பிரதமருக்கு கோரிக்கையாக வைக்கிறேன்" என்றார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad