கோவில் நிர்வாகம் அலட்சியம் - மீண்டும் நான்கு சக்கர வாகன நிறுத்தம் அரங்கேற்றம்.
திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி தரும் சிவஸ்தலம் ஸ்ரீ உண்ணாமுலை உடனுறை அண்ணாமலையார் எழுந்தருளி அருள் பாவிக்கும் உலக பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலம் இங்கு தான் எத்தனை நீதிமன்ற அவமதிப்புகள் கோயில் நிர்வாகத்தால் நடத்தப்படுகிறது என பக்தர்கள் மன வேதனையுடன் பேசிக் கொள்வது நமக்கு அதிர்ச்சியை தர அது உண்மைதானா என அறிய திரு அண்ணாமலை ராஜகோபுரம் முன்பு சென்று பார்த்த போது நமக்கு பெரிய அதிர்ச்சி ஏன் எனில் சமீபத்தில் தான் நமது மாவட்ட நீதியரசர் திரு மகிழ் ஏந்தி அவர்களால் ராஜகோபுரம் முன்பு இருந்த தனியார் நான்கு சக்கர வாகனம் நிறுத்தும் இடத்தை அகற்றி தூய்மை படுத்தி பூங்காவாக மாற்றவும் இக்கால சூழலில் மரங்களின் தேவையை அறிந்து கோவில் நிர்வாகமும் இணைந்து தான் அந்த பகுதி முழுவதும் மரக்கன்றுகளை நட்டு வைத்தார் அதற்க்கு விழாவும் எடுத்தனர்.
ஆனால் நீதியரசர் நட்ட மரம் செடிகளை பட்டு போக செய்யும் நோக்கில் மீண்டும் அந்த இடத்தில் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாற்றப்பட்டுள்ளதை கண்டு பக்தர்களும் , சமூக ஆர்வலர்களும் மிகவும் மனம் வருந்திபோய் உள்ளனர் யாரோ ஒரு சில சுய நல கோவில் நிர்வாகியால் மீண்டும் பணம் சம்பாரிக்கும் நோக்கில் அவ்விடத்தை கையூட்டு பெற்றுக் கொண்டு குத்தகைக்கு விட்டுள்ளார் என பொதுமக்கள் பேசி கொள்கின்றனர் மரம் மழை தரும் நிழல் தரும் கனி தரும் தூய காற்றை தரும் நம் எதிர்கால சந்ததிக்கு நல்வாழ்வு தரும்
ஆனால் பணம் என்ன தரும் தற்ச் சமய சுகத்தை மட்டுமே தரும் என்பதை உணர்ந்து மாவட்ட நிர்வாகம் நீதியரசரால் நடப்பட்டு பராமரிப்பின்றி நாசமாகவுள்ள அந்த செடிகள் மரங்களை காக்குமா அல்லது சுயநலமிகளுக்கு விலை போகுமா என பொறுத்திருந்து பார்ப்போம் அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்
செய்தியாளர் திருவண்ணாமலை - மூர்த்தி
கருத்துகள் இல்லை