Header Ads

  • சற்று முன்

    ராஜகலைஞன் விருது வழங்கும் விழா


    தமிழகப் பண்பாட்டுக் கழகம்  சார்பில் தமிழகத்திற்கு பெருமை தேடித்தந்த தன்னலமற்ற கல்விச் சேவைக்கு மகுடமாய் அறிவுச்சுடர் ஏற்றும் நாடு போற்றும் நல்லாசிரியர்களுக்கு ராஜகலைஞன் விருது வழங்கி கௌரவிக்கும் விழா திருச்சி தேவர் அரங்கில் ஏப்ரல் 5ஆம் தேதி நடைபெறுகிறது.

    அருள்மிகு அரங்கநாதர் திருக்கோவில் பட்டாட்சியர் சுந்தர் பட்டர் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியினை துவங்கி வைக்கின்றார் கௌரவத் தலைவர் உஸ்மான் சாஹிப் தலைமை வைக்கிறார் சவரிமுத்து நினைவு அறக்கட்டளை மேலாண்மை அறங்காவலர் ரவிச்சந்திரன் செய்யது முஹம்மது கலிஃபா மற்றும் பழனி ஆகியோர்  முன்னிலை வகிக்கிறார்கள்

    கலை பண்பாட்டுத்துறை துணை இயக்குநர் முனைவர் இரா.குணசேகரன் விருது வழங்குகிறார். திரைப்பட இயக்குநர் சுந்தர்ராஜன், சின்னத்திரை நடிகர் பூவிலங்கு மோகன், நடிகை சுஹாசினி, நாட்டுப்புற பாடகி சின்னப்பொண்ணு, நகைச்சுவை பேச்சாளர் சசிகலா உள்ளிட்டோர் விருது பெறுகிறார்கள்

    எழுத்தாளர் மணவை பொன் மாணிக்கம் குளோபல் அமைதி பல்கலைக்கழக இயக்குனர் செல்வம் சமூக ஆர்வலர் சங்கர் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள் சிறப்பு அழைப்பாளர்களாக இலக்கிய செல்வி பூஜிதா இலட்சியம் கல்வி அறக்கட்டளை தலைவர் ரஜினி உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்

    நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர், முதுகலை பட்டதாரி, ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர், ஓவிய ஆசிரியர், இசை ஆசிரியர், தொழிற்கல்வி ஆசிரியர், பள்ளி முதல்வர் என பல்வேறு துறைகளில் வெற்றி வாகை சூடிய தொழில் முனைவோர்கள் ராஜ கலைஞன் விருது பெறுகிறார்கள்.

    முன்னதாக செயலர் கதிரேசன் வரவேற்க வழக்கறிஞர் ஜோசப் பால்ராஜ் நன்றி கூறுகிறார்  தமிழகப் பண்பாட்டுக் கழக மாநிலத் தலைவர் ஜாகிர் உசைன் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்து வருகிறார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad