Header Ads

  • சற்று முன்

    மின்வாரிய அலுவலகத்தில் குடிபோதையில் மல்லாக்க படுத்து உறங்கிய ஊழியர்


    கன்னியாகுமரி: சட்டையை கழட்டிவிட்டு.. தரையில் மல்லாக்காக படுத்து கொண்டு போதையில் மின் அலுவலக ஆபீசில் குறட்டை விட்டு தூங்கி கொண்டிருக்கிறார் ஒரு ஊழியர்! கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை, கிராத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று ராத்திரி கரண்ட் கட் ஆகிவிட்டது. ராத்திரி நேரம் என்பதால் எப்போது கரண்ட் வரும், எப்போது தூங்குவது என்ற கலக்கம் வந்துவிட்டது. இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் ஈபி ஆபீசுக்கு போன் செய்தார்கள்.

    ரொம்ப நேரம் ரிங் போனதே தவிர, யாருமே போனை எடுக்கவில்லை. இதனால் மேலும் கடுப்பாகி, நித்திரவிளை மின் அலுவலகத்திற்கே எல்லாரும் திரண்டு வந்துவிட்டனர். அப்போது ஆபீஸ் திறந்துதான் இருந்தது. கதவுகள் திறந்த நிலையில், எல்லா ரூமிலும் ஃபேன்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. ஹாலில் டேபிளுக்கு கீழே அந்த ஊழியர் தூங்கி கொண்டிருக்கிறார். மேல் சட்டையை கழற்றிவிட்டு, அப்படியே மல்லாக்காக கீழே படுத்துவிட்டார். நல்ல போதையிலும் இருந்திருக்கிறார். இதைப்பார்த்ததும் இன்னும் கொதித்து போய் விட்டனர் மக்கள்! அப்போது மணி இரவு 8.45! வாய்க்கு வந்ததை எல்லாம் ஜனங்க திட்ட ஆரம்பித்துவிட்டனர். "எங்களுக்கு ஊருக்குள்ள கரண்ட் இல்லை.. போன் போட்டாலும் எடுக்கல.. இந்த நேரத்துக்கே இப்படி தூங்கினால் என்ன அர்த்தம்? யார் இதை கேட்கிறது?" என்று மக்கள் புலம்பி செல்கிறார்கள். அது எதுவுமே போதை ஊழியர் காதில் ஏற வாய்ப்பே இல்லை. இந்த வீடியோதான் இப்போது வைரலாகி வருகிறது

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad