Header Ads

  • சற்று முன்

    இந்திய மக்களவை தேர்தல் 3வது கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது


    இந்திய மக்களவைத் தேர்தலின் மூன்றாவது கட்ட வாக்குப்பதிவு 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலுள்ள 115 தொகுதிகளில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    முன்னதாக, கடந்த 11ஆம் தேதி நடந்த முதல்கட்ட வாக்குப்பதிவு 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலுள்ள 91 தொகுதிகளிலும், 18ஆம் தேதி தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களிலுள்ள 95 தொகுதிகளிலும் நடந்த நிலையில் இன்று மூன்றாவது கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இன்று நடைபெற்று வரும் மூன்றாவது கட்ட வாக்குப்பதிவை மாநில வாரியாக பார்க்கும்போது, குஜராத்தில் 26 தொகுதிகளிலும், கேரளாவில் 20 தொகுதிகளிலும், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் தலா 14 தொகுதிகளிலும், உத்தரப்பிரதேசத்தில் 10, சத்தீஸ்கரில் 7, ஒடிஷாவில் 6, மேற்கு வங்கம் மற்றும் பீகாரில் தலா 5 தொகுதிகள், அசாமில் 4, கோவாவில் 2 தொகுதிகளிலும், ஜம்மு & காஷ்மீர், திரிபுரா, தாதர் & நாகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ ஆகிய பகுதிகளில் தலா ஒரு தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
    குறிப்பாக, குஜராத் (26), கேரளா (20), கோவா (2), தாதர் & நாகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தமுள்ள தொகுதிகளுக்கும் இன்று ஒரே நாளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

    மொத்தமுள்ள 7 கட்டங்களில் இன்றுதான் அதிகபட்சமாக 115 மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad