Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டியில் மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்கும் முறை விளக்க முகாம்


    கோவில்பட்டியில் மாற்றுத் திறனாளிகளுக்கான வாக்களிக்கும் முறை பற்றிய விளக்க முகாம் நடந்தது.  மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவனம் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கான வாக்களிக்கும் முறை பற்றிய விளக்க முகாம் கோவில்பட்டி பழைய பேருந்து நிலையத்தில் நடந்தது. வட்டாட்சியர் லெ.பரமசிவன் தலைமை வகித்தார். மாற்றுத் திறனாளிகள் தேர்தல் தூதர் அழகுலட்சுமி மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு வாக்களிக்கும் முறை பற்றி விளக்கப்பட்டது. 

    மாற்றுத் திறனாளிகள் 17வது பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவன தலைவர் தேன்ராஜா, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை பேச்சுப் பயிற்சியாளர் ராஜேஸ்வரி, சமூக நலத்திட்ட வட்டாட்சியர் மல்லிகா, வருவாய் ஆய்வாளர் மோகன், கிராம நிர்வாக அதிகாரி அபிராமசுந்தரி மற்றும் மாற்றுத் திறனாளிகள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad