Header Ads

  • சற்று முன்

    திருவாடானையில் உழவார பணி என்ற போர்வையில் மூலிகை மரங்கள் வெட்டி சுவாகா ....


    திருவாடானை அருள்மிகு ஆதிரத்தினேஸ்வரர் ஆலயத்தில் மூலிகை மற்றும் தெய்வீக குணங்கள் கொண்ட மரங்கள் உழவாரப்பணி என்ற போர்வையில் வெட்டி சுவாகா  செய்துள்ளார்கள். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள், பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்



     ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானையில் பல நூறு ஆண்டுகளுக்கு முந்தைய அருள்மிகு ஆதிரத்தினேஸ்வரர் ஆலயம் உள்ளது இந்த சிவாலயத்தில் பழமை வாய்ந்த தெய்வ குணம் கொண்ட வன்னி மரம், மூல வேப்ப மரம், தேக்கு மரம், அருமருத்துவ குணம் கொண்ட நெல்லி மரம், போன்ற மரங்கள் பாதுகாக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த கோவில் உழவாரப்பணி செய்வதுபோல செய்துவிட்டு இந்த பழமை வாய்ந்த மருத்துவ குணங்கள் தெய்வீக குணங்கள் கொண்ட மரங்களை வெட்டி கபளீகரம் செய்துள்ளனர் இதுகுறித்து கோவில் நிர்வாகத்திடம் கேட்டபோது அவர்கள் வெட்டிய மரங்களை கொண்டு வந்து போட்டு விட்டதாக தெரிவித்தார்கள். நாம் சென்து பார்த்த போது மரக்கிளைகள் தான் கிடந்தது பெரிய மரங்கள் இல்லை. இந்த மரங்களை வெட்டியதற்கான காரணத்தை தெரிவிக்க வில்லை.   இந்த மரங்கள் பல லட்சம் விலை போகக் கூடிய மரங்கள் என்றும், தெய்வீக மற்றும் மருத்துவ குணம் கொண்ட மரங்கள் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர் இப்படி உழவாரப்பணி என்ற போர்வையில் மனங்களை வெட்டி கபளீகரம் செய்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பக்தர்கள் கோரிக்கை வைத்தார்கள். புதிதாக வந்த திவான் நடவடிக்கை எடுக்க பொறுத்திருந்து பார்ப்போம்


    செய்தியாளர் : ஆனந்குமார்  - திருவாடானை 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad