• சற்று முன்

    பாலியல் தொந்தரவு போன்ற விஷயங்களில் பாதுகாக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது – நடிகை கௌதமி


    பாலியல் தொந்தரவால்  பெண்கள் மட்டும் பாதிக்கபடுவதில்லை ஆண் குழந்தைகள் பெரியவர்கள் என எல்லோரும், பல விதத்திலும் பாதிக்கப்படுகின்றனர்,இது போன்ற விஷயங்களில் இருந்து அனைவரையும் பாதுகாக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது என்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்பு செய்தியாளர்களிடம் பேசிய திரைப்பட நடிகை கௌதமி தெரிவித்தார்.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தனியார் அமைப்பு சார்பில் யோகா பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகை கௌதமி கலந்து கொண்டு யோகா பயிற்சி முகாமினை தொடங்கி வைத்து பேசினார். இதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசுகையில் யோகாவினால் நம்முடைய உலகத்தினை மாற்றிக்கொள்ளும் சக்தி உள்ளது. என்னுடைய சொந்த அனுபத்தில் இருந்து உறுதியாக சொல்ல முடியும், எனக்கு புற்றுநோய் அனுபவம் கிடைத்த போது,பல்வேறு பிரச்சினைகள் இருந்தது, 


    புற்று நோய் முன்புக்கு இருந்த உடல்நிலை, புற்றுநோய் சிகிச்சைக்கு பின்பு அப்படியே மாறும், மறுபடியும் நமது உடல்நிலை நமது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்றால், அதற்கு யோகா ஒரு, மிகப்பெரிய அருமையான ஆயுதம், பலவிதமான புற்றுநோய்கள் அறிகுறிகள் இருந்தாலும், நாம் சொல்வதற்கு தயக்கம் காட்டுவது மட்டுமின்றி அலட்சியபடுத்தும் நிலை உள்ளது. இதனால் தன்னுடைய உயிர் மட்டுமல்ல, குடும்பமும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. பாலியல் வன்கொடுமை என்பது பெண்கள் மட்டும் பாதிக்கபடுவதில்லை ஆண் குழந்தைகள், பெரியவர்கள் என எல்லோரும், பல விதத்திலும் பாதிக்கப்படுகின்றனர். பாலியல் தொந்தரவு போன்ற விஷயங்களில் பாதுகாப்பாக இருக்க அரசுக்கு மிக பெரிய பொறுப்பு உள்ளது.பாலியல் போன்ற விஷயங்களில் மீடியாக்கள்  டி.ஆர்.பி ரேட்டிங்காக  , தலைப்பு செய்தியாக போட்டு பரபரப்பு செய்தியாக போட வேண்டாம்என்றும், இருக்கிற விஷயத்தை, இதன் உண்மையான முகம் வெளியே தெரியுமாறு, இதன் பாதிப்பை புரிந்து கொள்ளும்படி ,இது போன்று யாருக்கும் வரக்கூடாது என்பது போன்று வெளிப்படுத்த வேண்டும், பரபரப்பை ஏற்படுத்த வேண்டாம் என்றும், திரைப்பட தயாரிப்பாளர் சங்க பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது, அதனை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்றார்.

    செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad