ஓசூரில் வீடு புகுந்து கொள்ளை பொதுமக்கள் அச்சம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நேரு நகர் பகுதியில் அருகருகே உள்ள வீடுகளில் பட்ட பகலில் பூட்டை உடைத்து திருடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
ஓசூர் நேரு நகர் பகுதியில் உள்ள அவ்வை தெரு பகுதியைச் சேர்ந்தவர் குமார்சுவராஜ்சிங்(40) இவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். ஓசூர் அருகே உள்ள கெலமங்கலம் ரயில்வே ஸ்டேஷனில் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள மற்றொரு புதிய வீட்டிற்கு குடி சென்றுள்ளார். கடந்த 3,4 நாட்களாக பொருட்கள் எடுத்து வந்து புது வீடடில் போட்டுள்ளார். இன்று மதியம் பழைய வீட்டிற்கு பொருட்கள் கொண்டு வர சென்ற சமயத்தில் மர்ம நபர்கள் சிலர் இவரின் புது வீட்டின் கேட்டு மற்றும் கிரில் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த தங்கம்,வெள்ளி,வைரம் உள்ளிட்ட நகைகள் சுமார் ரூ 10 லட்சம்,ரொக்கம் ரூ 50 ஆயிரம் திருடி சென்றுள்ளனர்.
அதைப்போல் இவரது பக்கத்து வீட்டில் ஹைதராபாத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வரும் கோபி என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து ஒரு பவுன் நகையை யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.
செய்தியாளர் : சி. முருகன் - ஓசூர்
கருத்துகள் இல்லை