Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி பேருந்து நிலைய பொதுமக்களுக்கு பன்றி காய்ச்சல் தடுப்பு குறித்து கைகழுவும் பயிற்சி



    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி, மற்றும் ரோட்டரி சங்கம், பொது சுகாதாரத்துறை சார்பில் கோவில்பட்டி பழைய பேருந்து நிலையத்தில் வைத்து பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு செய்முறை விளக்க பிரச்சாரம்நடைபெற்றது.


    கோவில்பட்டி நகர் முழுவதும் பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக கோவில்பட்டி பழைய பேருந்து நிலையத்திற்கு வரக்கூடிய பொது மக்கள், ஆட்டோ ஒட்டுநர்கள், பேருந்து ஓட்டுநர்கள் அனைவருக்கும் மாஸ்க் அணியப்பட்டு, கைகழுவும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. பின்னர் பேருந்து நிலையம் மற்றும் பேருந்துகளில் லைசால் கிரிமி நாசினி தெளித்து பன்றி காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பொது மக்கள் அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி நகராட்சி ஆணையாளர் அச்சையா தலைமை வகித்தார்.


    கோவில்பட்டி ரோட்டரி சங்க மாவட்ட துணை ஆளுநர் டாக்டர்.சம்பத்குமார், சுகாதார பணிகள் துணை இயக்குநர் போஸ்கோ ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில்பட்டி ரோட்டரி சங்கத் தலைவர் ஆசியாபார்ம்ஸ் பாபு அனைவரையும் வரவேற்றார்.கோவில்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் ராமமூர்த்தி பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு தடுப்பு குறித்து விழிப்புணர்வு நோக்க உரையாற்றினார். கோவில்பட்டி ரோட்டரி சங்க சுகாதார பயிற்றுநர் முத்துமுருகன் கைகழுவும் முறை குறித்து செய்முறை பயிற்சி அளித்தார்.கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். 

    நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் குருசாமி, நகரமைப்பு அலுவலர் காஜாமைதீன், துணை இயக்குநரின் நேர்முக உதவியாளர் மாரிமுத்து, நகராட்சி சுகாதார அலுவலர் ஸ்டேன்லிகுமார், நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் வள்ளிராஜ், முருகன், திருப்பதி, சுரேஷ்குமார், ரோட்டரி சங்க நிர்வாகிகள் ரவிமாணிக்கம், வீராச்சாமி, பத்மநாபன், பிரபாகரன் உள்ளிட்ட தூய்மை பாரத இயக்க பரப்புரையாளர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், டெங்கு தடுப்பு களப் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.நகராட்சி சுகாதார ஆய்வாளர் சுரேஷ் நன்றி கூறினார்.

    செய்தியாளர் : கோவில்பட்டி சிவராமலிங்கம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad