Header Ads

  • சற்று முன்

    சனி பிடியில் இருந்து விலக இதை கடைப்பிடிக்க வேண்டும்


    ஒருவருடைய வாழ்க்கையில் நடைபெறும் பாவ புண்ணிய கணக்குகளை சரிப்பார்த்து,அவர்கள் மனம் திருந்துவதற்கு சில கடுமையான சோதனைகளைக் கொடுத்து திருத்தும் தர்ம தேவதையே சனி பகவான். அவரின் சோதனைக்கு உட்படாதவர்களே யாரும் இருக்க முடியாது. அவரின் தாக்கத்தில் இருந்து நம்மை காத்துக் கொள்ள நமக்கு தெரிந்ததும் தெரியாததுமான சில குறிப்புகள்.

    சனிக்கிழமைதோறும் விரதமிருந்து பெருமாளை வழிபட்டு காக்கைக்கு உணவு படைத்தல் வேண்டும். சனி பகவானின் வாகனமான காகத்திற்கு தினமும் எள் கலந்த சாதம் வைக்கலாம். இதனால் ஜோதிடம் மற்றும் ஆன்மீக ரீதியாக மட்டுமல்லாமல் ஒரு ஜீவனுக்கு உணவளித்த மனதிருப்தியும் கிடைக்கும்.

    சனி பகவானுக்கு உகந்த உலோகம் இரும்பு என்பதால், சனிக்கிழமை தோறும் இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணையில் தீபம் ஏற்றி வழிபடலாம்.

    கருங்குவளை மலர்களால் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்தால் அவரின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம். மரங்களில் வன்னிமரத்தை சுற்றி வந்து வணங்க வேண்டும். இதனால் சனிபகவானின் கொடுமையான பாதிப்புகள் விலகி விடும்.

    நவகிரகங்களில் ஈஸ்வர பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனி மட்டும் தான்.ஈஸ்வரனின் அருளைப் பெற்ற சனி பகவானை சந்தோஷப்படுத்த, சனிக்கிழமை தோறும் சிவபெருமானுக்கு வன்னி மர இலைகளை மாலைகளாகத் தொடுத்து சாற்றி வணங்கலாம்.

    பிரதோச காலத்தில் சிவபெருமானுக்கு வில்வ இல்லை கொடுத்து வணங்க வேண்டும். சனி பிரதோஷ வழிபாடு அனைத்திலும் சிறந்தது.

    சனிக்கிழமை தோறும் நல்லெண்ணை குளியல் செய்தால் கெடுதல் குறையும். குறிப்பாக சனிக்கிழமை அசைவ உணவு கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. இதுவும் ஆரோக்கிய ரீதியாக நமது நன்மையைக் கருதி சொல்லப்
    படுகிறது .

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad