• சற்று முன்

    ஓசூர் அந்திவாடி பகுதியில் ஈச்சர் லாரி திடீர் தீக்கிரையானது


    ஓசூர் அந்திவாடி பகுதியில் பெங்களூரில் இருந்து தேனீக்கு சென்று கொண்டிருந்த ஈச்சர் லாரி எதிர்பாராதவிதமாக திடீரென்று தீப்பற்றி எரிந்து நாசம்


    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அந்திவாடி பகுதியில் மாலை வேளையில் ஈச்சர் லாரி டீசல் நிரப்பி கொண்டு   நெடுஞ்சாலைக்கு வந்தப்போது திடிர் என்று தீ பற்றி எரிய தொடங்கியது  தீ மெள்ள மெள்ள லாரி முழுவதும் பரவிய நிலையில் எதிரே வந்த வாகன ஓட்டிகள் எச்சரித்ததை அடுத்து தீ பற்றி எரிந்து கொண்டிகுந்த லாரியை நெடுஞ்சாலை ஓரமாக நிருத்தியப்படி இரங்கி தூரமாக ஓடிவுள்ளர், 



    காற்றின் வேகத்திற்க்கு தீ லாரி முழுவதும் பற்றி எரிய ஆரம்பிக்க  உடனே அக்கம் பக்கம் உள்ளவர்கள் தீனைப்பு வாகனத்திற்க்கு தகவல் கொடுத்துள்ளார்  சற்று நேரத்தில் தகவல் அறிந்து வந்த மத்திகிரி காவல் நிலைய போலீஸார்   எரிந்து கொண்டிந்த லாரியின் பக்கம் பொதுமக்கள் யாரும் செல்லாத வன்னம் பாதுகாப்பில் ஈடுப்பட்டனர் இதற்க்கிடையில் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீ பற்றி எரிந்து கொண்டிருந்த ஈச்சர் லாரி மீது தண்ணீரை பீச்சி அடித்து  தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.



    இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயங்களும் ஏற்படவில்லை , மத்திகிரி போலீஸார் வழக்கினை பதிவு செய்து  தீ விபத்து எப்படி நிகழ்ந்தது என்று  லாரி ஓட்டி வந்த தேனீயை சேர்ந்த டிரைவர் குமார் (35) இடம்  போலீஸார் விசாரனை மேற்கொண்டனர்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad