Header Ads

  • சற்று முன்

    என்னைக் கொல்லாதே... ஆசிரியர் நீலம் மூன் முன்கதை (26..08.18 )


    எதிரே  கண்டெயினர் அசுர வேகத்தில் விரைந்து மோத  வேண்டிய தருணம்.  தன் கதை முடிந்து  விட்டது. என எண்ணி நினைப்பதற்குள், மின்னலாய் ஒரு  அதிர்வு மெத்தையில் கிடந்தது போல உணர்வு. கண்டெயினர் போஸ்ட் கம்பத்தில் மோதி நின்றது.  தூக்குங்கப்பா  பாவம் பொம்பளப் பொண்ணு எவ்வளவு நேரம் நெஞ்சிலே சுமக்கும். என பொது மக்கள் சத்தம் போட்டனர். நீலேஷ் காதில் விழுந்தாலும். கண் திறக்க முடியாத நிலையில் மயங்கி சோர்வுடன், விளங்கினான்.  ஒரு வழியாக உணர்வு பெற்று பெண்ணுக்கு நன்றி கூறி  மெடிகல் ஷாபில் பிரிண்ட் போட்ட தகவல்களைத் தேடினான் அதிசயம் ஒன்றும் இல்லை.  

    எப்படி மாயமானது. அப்படி என்றால் தன்னை யாரோ பின் தொடருகின்றனரா  என்ற சந்தேகம் துளிர்த்தது. மெதுவாக எழுந்து பைக்கை எடுக்க முயற்சி செய்தான். அரவிந்தன் ஓடி வந்தான் . மச்சான் இரு நான் துணைக்கு வர்றேன்  என்றதும் அருகே இருந்த பெண் அவரை நானே  அழைத்து போகிறேன் நீங்கள் உங்க ஷாப்பை கவனிங்க இவருடைய  பைக்கை எடுத்துட்டு  போய் வெச்சுகோங்க என்றாள். அவளுடன் போக நீலேஷ் பயந்தான். சம்மனே இல்லாமல் ஆஜார் ஆகுறாலே பின்புலம் புரியாமல் குழம்பினான். காந்தன் பீதி அடைவதில் தவறு சொல்ல முடியாதே, சார்  போலாமா ; வீட்டு..... அட்ரஸ் ...சொல்ல  வாய் திறந்தான். எனக்குத் தெரியும் என்னுடன் பைக்கில் பின்னால் உட்கார்ந்து வாங்க எனக் கூறினாள் மறுத்து வாதாடாமல் அமர்ந்தான் அடுத்த நிமிடம்  வண்டி  பறந்து லட்சுமி காந்தன்   வீட்டின்  முன்னால்  நிறுத்தி மாலையில் சந்திப்பதாகச் சொல்லி மாயமாய்  மறைந்தாள்.  முடங்கிப் போன உடலை புத்துணர்ச்சிப் பெறக் குளியல் அறைக்குச் சென்று குளித்து தெம்புடன் திரும்பினான். அவனுக்காக காத்திருந்த காந்தனுக்கு, பதில் ஏதும் உரைக்காத நண்பனிடம். மாப்பிள்ளை போன விஷயம்  காயா  பழமா அந்த பெண்ணை கவனிச்சியா நான்  கொடுத்த தகவலுக்கேற்ப இருந்ததா. தொன தொனவென தொனப்பினான். எரிச்சலில் முகம் சுருங்கி ஆன்டி சமாச்சாரம் பற்றியப்  பேச்சை தள்ளி வைக்கலாம்னு தோணுதுடா. காந்தா. என்றதும் தைரியசலியான நீலேஷ் வாயிலிருந்து வந்த பதில் திகைக்கச் செய்தது.  

    சற்று முன் நடந்ததை சொல்லலாமா வேண்டாமான்னு யோசித்தான்.. பிறகு மெதுவாகச்  சொல்லி விட்டான்.  நல்ல காலம் பொறக்குது   நல்ல  காலம்  பொறக்குது  நல்ல வாக்கு சொல்லடி சக்கமா இந்த வீட்டு புள்ள உசுரு காப்பாத்த வரப் போறா......கிழக்கு புற  சன்னல் ஓரம் அஞ்சு விரல்கள்.பதிஞ்சு இருக்கு பதமா கத்தி தலைக்கு மேலே தொங்குது. சிநேகிதன் உசுருக்குள்ளே....  பெண்ணு  ...நீலேஷ் உடல் பதற  கீழே ஓடினான்; வாசலில் இரத்தக்கறை படிய உசுரு ஊஞ்சலாட  விழிகள் பிதுங்க  நின்றான்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad