• சற்று முன்

    சென்னை k-1 காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரிவு உபசார விழா



    சென்னை பெரம்பூர் K-1 செம்பியம் காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த கிருஷ்ணன் என்பவர் ஒய்வு பெற்றார்.


    அவருக்கு பிரிவு உபசாரம் பெரம்பூர் சந்திர சேகர் திருமண மண்டபத்தில் இரவு 8.00 மணியளவில் நடைபெற்றது.

    இந்த பிரிவு உபசார விழாவில் செம்பியம் காவல் ஆய்வாளர் ஜெகனாதன் தலைமையில் நடைபெற்றது. மேலும் அவருடன் பணியாற்றிய உதவி ஆய்வாளர்கள்,  முபாரக், பாஸ்கர்,  எழுத்தர், மற்றும் உளவு பிரிவு சேர்ந்த சரவணன், சிவலிங்கம், ஆகியோர் கலந்து கொண்டனர். அவர் பணியின் போது அவரோடு சேர்ந்து பணியாற்றிய பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

    ஆய்வாளர் பேசும் போது அவரது பணி காலத்தில் சுறுசுறுப்பாகவும், சொன்ன வேலைகளை குறித்த நேரத்தில் விரைவாக செய்வது அவருக்கு நிகர் அவரே என்று பாராட்டினர்.

    அவரிடமிருந்து பல விஷயங்களை கற்றுக்கொண்டோம் எங்களுக்கு எல்லாம்  அவர் குருநாதர் என்று உதவி ஆய்வாளர்கள் பாராட்டி பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad