• சற்று முன்

    கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோவில் பங்குனி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்



    கோவில்பட்டியில் உள்ள செண்பகவல்லியம்மன் - பூவனநாதசுவாமி திருக்கோவில் தென் மாவட்டங்களில் புகழ்பெற்ற சிவ ஆலயங்களில் ஒன்று. இக்கோவிலின் முக்கிய விழாக்களில் 11 நாள்கள் நடைபெறும் பங்குனி பெருந்திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமாரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான பங்குனி பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 


    இதனை முன்னிட்டு இன்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கணபதி பூஜை மற்றும் யாகபூஜை நடைபெற்றது. இதனை தொடர்ந்து சுவாமி சன்னதி முன்பு உள்ள கொடிமரத்தில் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. இதன் பின்பு கொடி மரம் மற்றும் நத்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாரதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் ஒவ்வொரு நாளும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மக்களுக்கு அருள் பாலிக்கின்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான திருத்தேரோட்டம் வரும் 13ந்தேதி, தீர்த்தவாரி நிகழ்ச்சி 14ந்தேதியும், தெப்பத்திருவிழா 15ந்தேதியும் நடைபெறுகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad