• சற்று முன்

    கருவுற்ற தாய்மார்களுக்கு வெந்திய தண்ணீர் உகந்தது.

    வெந்தய தண்ணீர் தாய்மார்களுக்கு சிறந்தது. இந்த நீர் தாய்ப்பால் சுரப்பதை ஊக்குவிக்கிறது.
    வெந்தயம் இரத்த அழுத்தத்
    தை கட்டுப்படுத்தவும் அற்புதமான ஒன்று. ஆயுர்வேத மருத்துவத்தில் வெந்தயத்தை தங்கம் என்றே கூறுகிறார்கள். வெந்தயத்தை தண்ணீரில் ஊரவைத்து குடிப்பதால் வெந்தயத்தில் உள்ள மூலப்பொருட்கள் தண்ணீரில் சேர்ந்து விடுகிறது. வெந்தயத்தை சீரகம் சேர்த்து ஒரு இரவு முழுவதும் ஊரவைத்து காலையில் குடிப்பதால் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படும். உடல் எடை குறைய, கல்லீரல் பிரச்சனைகள் தீர மற்றும் சிறுநீரகம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க வெந்தய தண்ணீர் உதவுகிறது. காலையில் வெறும் வயிற்றில் ஊரவைத்த வெந்தய தண்ணீர் குடிப்பது நல்லது. உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை தக்கவைக்க வெந்தயம் உதவுகிறது. உடலில் அரிப்பு, முகப்பருக்கள் இருந்தால் வெந்தயத்தை அரைத்து பேஸ்ட் ஆக்கி பாதித்த இடத்தில் தடவவும். நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்த தினமும் வெந்தயத்தை உட்கொள்வது நல்லது. நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க, சளி மற்றும் இருமல் குணமாக வெந்தய தண்ணீர் அற்புதமாக உதவுகிறது. வெந்தய தண்ணீர் உடலில் வெப்பநிலையை அதிகரிக்கிறது. உடலில் வெப்பநிலை சமநிலையில் இருப்பதால் பல்வேறு நோய்களை முற்றிலும் தவிர்க்க முடியும். தாய்ப்பால் குழந்தைக்கு தரும் பலன் போல் வேறுண்டா? இந்த தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்க வெந்தய தண்ணீர் உதவுகிறது. கருவில் குழந்தை ஆரோக்கியத்தியத்தை மேம்படுத்தவும் வெந்தய தண்ணீர் உதவுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க உதவுகிறது. வெந்தயம் இரத்த அழுத்தம், இரத்ததில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. இன்சுலின் உடலுக்கு தேவையான அளவு மட்டுமே சுரக்க வெந்தயம் வழி செய்கிறது. நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு வெந்தய தண்ணீர் வரப்பிரசாதம் என்றே கூற வேண்டும்.
    • ஒரு டம்ளர் தண்ணீரில் 1 - 2 ஸ்பூன் வெந்தயம் இரவில் ஊரவைத்து காலையில் எழுந்ததும் தண்ணீரை மட்டுமே குடிக்க வேண்டும்.
    • அல்சர் உள்ளவர்கள் வெந்தய தண்ணீர் குறைவாக குடிக்கவும்.
    • அதிகமாக வெந்தயம் உட்கொள்வதால் சருமம் பாதிக்கிறது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad