Header Ads

  • சற்று முன்

    சாணக்கியனின் தந்திரம் ஆசிரியர் - பொன் முகரியன்

    அரசியலில் சாணக்கியனின் தந்திரம் 



    கி.பி.3 ஆம் நூற்றாண்டில் மௌரிய வரலாறு மிகவும் புகழ் பெற்றது. இந்தியாவின் அரசியல் துறையை நிறுவிய பெருமை மௌரிய பேரரசையே  சாரும். இது தனக்கென ஒரு இடத்தை பெற்றுள்ளது.  அகழ்வாராய்ச்சியில் கிடைக்கப் பெற்றுள்ள நூல்கள் புராணக்கதை மகா வம்சம் அர்த்த சாஸ்த்திரம் முத்திர ராட்ஷசம் பரிஷிஸ்தபவர்ன கதாமஞ்சரி போன்றவை மௌரிய வரலாற்றில் முக்கியதுவத்தை  உணர்த்துகின்றன.   

    விதுதபன் என்ற கோசல மன்னன்ஒதுக்கப்பட்ட சாக்கியர்கள் தமது நாட்டைவிட்டு  ஊட்டி மலைகள் சூழ்ந்த பிரதேசத்தில் குடியேறினர் அங்கு பப்பாளி  மரங்கள் ஏராளமாக வளர்ந்து இருந்தன எனவே பப்பாளி வனம் எனப்பட்டது. மயில்கள் கூட்டமாக உலாவின எப்பொழுதும் அகவுவதால் மயூரா நகரம் என அழைக்கப்பட்டது.  மௌரியவம்சத்தில் சந்திரகுப்த மௌரியர் பிந்துசாரர் அசோகர் போன்றோர் ஆட்சிக் காலம் பொற்காலம் என்றழைக்கப்பட்டது. வரலாற்று ஏடுகளை திருப்பும் போது வளமான இராஜ்ஜியத்தைப் படைத்த கௌடில்யாரின் அழகு பிம்பம்நம் கண் முன் தோன்றுகின்றது. மௌரியவம்சம் தழைத்தோங்கவும், அரசியல் சதுரங்க விளையாட்டில் உன்னதமான செயல் திட்டங்கள், கருத்துக்கள் இவரால் பதிக்கப்பட்டன.     கௌடில்யர் ஒரு பிராமணர் குடும்பத்தில் பிறந்தவர். தட்சசீல பல்கலைக் கழகத்தில் பேராசிரியர். தம் தாய் மண்ணான மகதபேரரசை சிறப்புடன் ஆட்சி செய்ய மன்னரைத் தேடினார்.

    கொடுங்கோல்அரசன் மகாபத்ம நந்த வம்சத்தை அழித்து மகத்தில் புதிய அரசை நிறுவினார்.  வண்டிக்காரனின் தத்துமகன் சந்திரகுப்தன். இளமையில் அவன் முகத்தில் தோன்றிய பொலிவும் திடகாத்திரமான மன வலிமை கண்டு வியந்தார். மகதத்தின் அரசனாக்க முடிவு எடுத்தார். அவனுக்கு போர்க்கலையுடன் கல்வியும் கற்பித்து அரச பதவிக்கு தயார்படுத்தினர். 
    பஞ்சபில்தங்கியிருந்த கிரேக்க அரசாங்கத்தை விரட்ட கொள்ளையர்கள்
    அடங்கிய படையைத் திரட்டிப் போராடினார். இதுவே முதல் புரட்சியாகும். அந்த சமயத்தில் யானை தும்பிக்கையால் தூக்கி தன்முதுகில் சந்திரகுப்த வைத்தால் மௌரிய பேரரசர் இவரே என தீர்மானித்துஅரசனாக்கினார். பின்பு தானேஅமைச்சராகவும் குருவாகவும்அருகே இருந்து வழி நடத்தினார். அதில் அரசியல் விஷயங்கள் மன்னர் செயல்படும் முறை  மக்களின் பழக்க
    வழக்கங்கள் எல்லாம் இக்காலத்திற்கும் பொருந்துமாறுநூல்கள் இயற்றினார்.
    அர்த்தசாஸ்திரம் கால வெள்ளத்தால் அழியாத பொக்கிஷமாகத் திகழ்கிறது. அரசியல் வாழ்விற்கு கையேடுயாகும்.திருக்குறள் போன்று யாவராலும் ஏற்றுப் போற்றத்தக்கது. மந்திர தந்திரமுறைகள் விளக்கப்பட்டுள்ளது. எதிரிநாட்டை வெல்வதுடன் அரசர் சுறுசுறுப்பாக இருக்க வேண்டிய நிலையை கூறுகிறது.

    அர்த்தசாஸ்திரம் ௧௫அதிகாரங்களாகவும் ௧௮௦ பிரகானங்களாகவும் பிரிக்கலாம். முதற் பகுதியில் மன்னர் மற்றும் அமைச்சர்ஆலோசனைக் குழுவின் நிர்வாக துறைகள் பற்றியது. இரண்டாவது பகுதியில் சிவில் கிரிமினல் சட்டங்கள் பற்றிய செய்திகள் கூறப்படுகிறது. மூன்றாவது பகுதியில் பன்னாட்டு சட்டம் போர் இராஜதந்திரம் ஆகியவற்றை பற்றி பேசப்படுகின்றன. 

    மருத்துவதுறையில் சாணாக்கியர் பெரிய சாதனைப் புரிந்துள்ளார். சந்திர
    குப்தருக்கு பாம்பின் விஷத்தை பிறர் அறியாமல் வழங்கி வந்தார். காரணம் எதிர்ப்பு சக்தி பெறவும், மன்னரை காக்கவும் செயல்பட்டார். ஒரு சமயம் சந்திரகுப்தர் தன் மனைவி தூர்த்தராவிற்கு தான் உண்ணும்உணவை அளித்தான்.கர்ப்பம் தரித்திருந்தவள் இதை அறியாமல் உண்டதால் குழந்தைக்கு விபரிதம் ஏற்பட்டது. சாணாக்கியர் வாரிசைக் காப்பாற்ற வயிற்றைக் கிழத்துசிசுவை வெளியே எடுத்தார். இன்றைய அறுவை சிகிச்சை மூலமாக குழந்தைகள் எடுப்பது போலவே அன்றே செயல்பட்டிருப்பது வியப்பில் ஆழ்த்துகிறது மருத்துவ உலகில் கோலோச்சும் சக்கரவர்த்தியாக திகழ்ந்தார்


    ஒருநாடு அல்லது அரசின் உறுப்புகள் ஏழு எனக் கூறுகிறார். அதாவது நம் நாட்டின் முதல் குடிமகன் குடியரசு தலைவர். அவ்வாறே அரசனே முதல் உறுப்பினர் ஆவார். அடுத்து ஆலோசனை கூறும் அமைச்சராவார்.  இவருக்கு ஆண்டுக்கு நாற்பது எட்டாயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது   மேலும் கோயில்கள் கட்டி அவற்றின் மூலம் மக்களிடமிருந்து எவ்வாறு பணத்தை  கறக்க  வேண்டும் என ஆலோசனையும் தருகிறார் i    

    இரட்டைக் கொள்கை முறையை மேற்கொண்டு பகைவர்களைவீழ்த்தும் முறையை பற்றிக் கூறவது அரசியல் ராஜதந்திரமாக கையாளப்பட்டது
    அசோகர் நீண்ட நாளாக வயிற்று வலியால் துடித்தார் எவ்வளவு மருத்துவம் செய்தாலும் நோய் தீரவே இல்லை. ராணி துடித்தாள். சாணாக்கியர் முறையைப் பின்பற்றி மருத்துவரை வரவழைத்து வயிற்றைக் கிழித்து பார்த்தால் பெரிய புழு ஒன்று இருந்து துன்புறுத்தியது. அப்புழு சாகவே இல்லை. வெங்காயம் தேய்த்ததும் புழு இறந்தது. கிருமி நாசினி என்பதை உணர்ந்தனர். 

    மௌரிய கட்டடக் கலை வித்தியாசமானவை மரங்கள் கொண்டு வீடுகள்
    மற்றும் கோட்டைகள் அமைத்தனர்.அரசனுடைய அரண்மனையானது ஆபத்தில் தப்பி ஓடக்கூடிய பல்வேறு இரகசிய சுரங்கப்பாதை வழிகள் இருக்க வேண்டும். மரத்தால் ஆனா அரண்மனைகள் கோடைக்காலங்களில் தீபற்றும் எனவேபானையில்நீரும் செயற்கை நீர் தாடகமும் வெட்டப்பட்டிருந்தது. சுற்றிலும் பாம்புகள் ஊர்வதால்அபாயம் ஏற்படாதிருக்க கீரிப்பிள்ளைகள் வளர்த்தனர்



    அரசனுக்கு ஆபத்து நேராவண்ணம் கண்காணிக்க அலிகள் பலர் நியமிக்கப்பட்டனர். பெண்கள் அரசருக்கு பாதுகாவலராய் விளங்கினர். வேட்டைக்கு செல்லும் போதும் கேளிக்கைகள் ஈடுபடும் போதும் பெண்கள் இருமருங்கிலும் வாளேந்தி நிற்பார்கள் என்று கூறப்பட்டிருக்கு அப்போது எத்தகைய திடமானா மனவுறுத்தி பெற்றுள்ளனர். என்பது அறிகிறோம் மன்னர்கள் பிறந்தநாளில் தலைமயிர் அலம்புதல் என்னும் பழக்கம் வழக்கமாக கொண்டாடினர் அன்று மக்கள் சந்தோஷமாக நகரை அழகு படுத்துவர் .

    கல்வி கடன் பற்றிய சட்டமும் வட்டியும் அன்றே திட்டம் வகுத்து இருந்தார்.
    ஒருவன்தான் கொடுத்த கடனுக்கு ௧௫ சதவீதம் என்றும் விவசாயி கடன் வழங்கப்பட்டது சில சமயம் வட்டிதள்ளுபடி செயப்பட்டது. பத்துவருடம்  கலாவதியானால்  அப்பணத்தை வசூல்செய்யக்கூடாது  வரிகள் வசூலிக்க முடியாத பொழுது வரிகளைத் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பாக விவசாயிகடன் நெசவுத்தொழிலாளி கடன் நாட்டிலிருந்து  காட்டு மிருகங்களை விரட்டியடிக்க அரசாங்கம் மானியம் வழங்கப்பட்டதுபோர் கலைகளில்  வியூகம் பற்றி செல்லப்பட்டுள்ளது  யோகதண்டம் போலவும் பாம்பு  போலவும் வட்டம் போலவும் அமைக்க வேண்டும்என கூறுகிறார முட்களை களைதல் என்ற நூலில் திடிரென மரணம் அடைந்தவர்களை சோதித்து இயற்கை மரணமா அல்லது தற்கொலையா கொலையா என்று கண்டுபிடிக்கும் முறையை மிக துல்லியமாக  காணித்தார். 

    மேலும்அவர்களுக்கு தண்டனைவழங்குவதிலும் பாரபட்சம் காட்டவில்லை கொடுமையாக தண்டித்தார் அது மட்டும் இன்றி குற்றத்தை அவர்களின் வாயால் ஒப்புக்கொள்ளக் கூடிய அளவிற்கு சித்திரவத்தை கடுமையாக செய்யஅறிந்திருந்தார்  விளையாட்டுகளில் அரசியல் முறைகள் ஒளிந்து இருந்தது. அனைவராலும் போற்றப்படும் சதுரங்கம்விளையாட்டு மௌரியர் காலத்தில் கௌடில்யர்என்னும் சாணக்கியனால் உருவாக்கப்பட்டது. 

    அரசானை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்என்பது சொல்லப்படுகிறது யானைப்படை குதிரைப்படை காலாட்படையுடன் எதிரியை தாக்கு போதும்  கடைபிடிக்க வேண்டியநியதிகள் நியாய தர்மம்இராஜதந்திரம் பற்றிதெளிவாக விளக்கியுள்ளார்சொத்துரிமை யாருக்கு உண்டு என்றால் ஒரு சொத்தை தொடர்ந்து பத்தாண்டுகள் ஒருவரே அனுபவித்து வந்தால் பின்னால் அது அவருக்கு சந்தமாகும் ஏற்கனவே வைத்திருப்பவருக்கு சோந்தமாகாது  ஆனால் சொந்தக்காரார் சிறுவனாகவோ முதியோராகவோ  இருந்து வெளி நாட்டுக்கு சென்றால் மேலே  சொன்னது பொருந்தாது. இவ்வாறு அர்த்த சாஸ்திர  நூலில்பற்பல விஷயங்கள் அரசியல் சார்ந்த முறையில் எழுதயுள்ளார்  மேலும் அதிசயமான குறிப்புகள் கிடைத்துள்ளன ஒற்றைக்காலைஉடைய மாந்தன். கையும் வையும் இல்லாத மனிதன்  கொம்புள்ள குதிரைகள் இறகு முளைத்த பாம்புகள் தரையைத்தொட்டு நின்ற காதுகளையுடைய பெண்கள் என்றும் குறிப்பிட்டப்பட்டுள்ளது.    

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad