ஏப்ரல் 5 மத்திய அரசை கண்டித்து முழு அடைப்பு போராட்டம் - ஸ்டாலின் அறிவிப்பு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, வரும் 5ஆம் தேதி அனைத்துக் கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலின், காவிரி உரிமையை மீட்பதற்காக விரைவில் நீண்ட பயணமும் மேற்கொள்ள இருப்பதாக கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை