Header Ads

  • சற்று முன்

    தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாளர் 144 தடை உத்தரவு பிறபித்துளார்


    தூத்துக்குடி மாவட்டத்தில் விடுதலை வீரர் சுந்தரலிங்கனார் பிறந்த நாள் விழாவிற்கு 144 தடை உத்தரவு பிறப்பித்த மாவட்ட நிர்வாகத்தை வன்மையாக கண்டிக்கின்றோம். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் மற்றும் கோவில்பட்டி பகுதியில் விடுதலை வீரர் சுந்தரலிங்கனாரின்  பிறந்த நாள் விழா 25 ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டாடப்பட்டு வருகிறது. இது வரை  இல்லாத 144 தடை உத்தரவு சுந்தரலிங்கனாரின் 248வது பிறந்த நாளில் மாவட்டம் முழுவதுமாக பிறப்பித்திருப்பது தூத்துக்குடியில் வாழ்வாதாரத்திற்காக 60 நாட்களுக்கு மேலாக அகிம்சை முறையில் ஸ்டெர்லைட் ஆலையினை மூட கோரி  போராட்டம் நடத்தி வரும் மக்களை அடக்கு முறைக்கு உள்ளாக்குவதும் , அறவழி போராட்டத்தினை சீர்குலைக்கும் உள்நோக்கம் கொண்டு பிறப்பிக்க பட்டதாகவே அறிகிறோம். இது கண்டனத்திற்குறிய செயலாகும். மக்கள் நலனில் அக்கறை கொண்ட மாவட்ட ஆட்சியர் உடனடியாக மாவட்டம் முழுமையாக பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவினை விலக்கி கொள்ள வேண்டும். தங்களின் அடக்கு முறை மக்கள் அறவழி போராட்டத்தில் திணிக்கப்படுமேயானால் மக்கள் தடையை மீறி அறவழி போராட்டம் தொடரும். இவண் : ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட குழு , தூத்துக்குடி.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad