காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது
சென்னை காவல் துறையில் பெண் காவலர்களும், பெண் அதிகாரிகளும் கடுமையான சவால்களை எதிர்கொள்வதாக மகளிர் தின விழாவில் பேசிய சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்
உலக மகளிர் தினத்தையொட்டிச் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், பெண் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்களுக்குப் பூங்கொத்துக் கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தார். கூடுதல் ஆணையர்கள் ஜெயராமன், சாரங்கன் உள்ளிட்ட அதிகாரிகளும் வண்ணச் சாயம் தோய்த்த கைகளால் கண்ணாடியில் தடம்பதித்து உறுதிமொழியேற்றுக்கொண்டனர்.
இதையடுத்து எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற விழாவில் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனுடன் அவரது மனைவியும் மாநில குற்ற ஆவண காப்பகத்தின் கூடுதல் டிஜிபியுமான சீமா அகர்வால் கலந்துகொண்டார். விழாவில் பெண் காவலர்களுக்கு பரிசு அளித்து பேசிய காவல் ஆணையர் விஸ்வநாதன் பெண் காவலர்கள், அதிகாரிகள் பங்களிப்பு இல்லாமல் சென்னை காவல் துறை அமையாது எனவும், கடுமையான சவால்களை எதிர்கொண்டு பெண் காவலர்கள் சிறப்பாக செயல்படுவதாகவும் பாராட்டினார்.
கருத்துகள் இல்லை